ஜர்ணா தாரா சௌத்ரி

ஜர்ணா தாரா சௌத்ரி (Jharna Dhara Chowdhury, 15 அக்டோபர் 1938 – 27 சூன் 2019)[1] கிழக்கு வங்காளச் சமூக சேவையாளர். காந்திய வழியில் சமூக மேம்பாட்டிற்காக தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர். சுமார் 25,000 ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு வளமான வாழ்வை உறுதி செய்தவர். ஜமன்லால் பஜாஜ் அமைப்பு, 'இந்தியாவிற்கு அப்பாலுள்ள இந்தியரல்லாத சிறந்த காந்தியவாதி' என்ற வகையில் 1998 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநரால் இந்திய அரசு வழங்கும் காந்தி புரஸ்கார் விருது பெற்றவர்.

ஜர்ணா தாரா சௌத்ரி

இளமை

தொகு

1936 ஆம் ஆண்டில் வங்காளத்தில் உள்ள லக்ஷ்மிபூர் அருகே ஓர் கிராமத்தில் ஜர்ணா தாரா சௌத்ரி பிறந்தார். 1946-47 ஆம் ஆண்டுகளில் வெடித்த நவகாளிப் படுகொலையின் போது எழுந்த கலவரங்கள், எட்டு வயதுச் சிறுமியாக இருந்த ஜர்ணா சௌத்ரியின் மனதில் ஆழமான காயங்களை ஏற்படுத்தின. கலவரத்தில் ஜர்ணாவின் பூர்வீக வீடும் கொளுத்தப்பட்டது. எனவே அவர்கள் குடும்பத்தோடு அருகில் உள்ள அஸ்ஸாமிற்கு இடம்பெயர்ந்தார்கள். வங்காளம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே அவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜர்ணா_தாரா_சௌத்ரி&oldid=3742885" இலிருந்து மீள்விக்கப்பட்டது