ஜலசமாதி என்பது சித்தர்கள் தங்களின் இறப்புக்கான நேரத்தில் நீர்நிலைகளில் இறங்கி தங்களை கரைத்துக் கொள்ளுதல் ஆகும்.[1] சித்தர்கள் பலர் ஜீவசமாதி எனும் நிலத்திற்குள் சென்று முக்திபெறுதலை செய்துள்ளார்கள். வெகுசில சித்தர்களே நீர்நிலைகளில் ஜலசமாதி அடைந்துள்ளார்கள்.

தங்களின் இறப்பினை முன்பே அறிந்து கொள்ளும் சித்தர்கள். அக்காலம் நெருங்கியதும் தங்களின் பக்தர்களுக்கு குறிப்பால் அதனை தெரிவித்துவிட்டு சமாதி நிலையை அடைகின்றார்கள். இந்தியாவின் தென்பகுதியான புதுச்சேரியில் வாழ்ந்துவந்த கம்பளிச் சித்தர் என்பவர் 1847 சித்திரை மாதத்தில் ஜலசமாதி அடைந்துள்ளார். இவருடைய அசரீரி நீரிலிருந்து கேட்டமையால் இவர் ஜலசமாதி அடைந்துவிட்டதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.[2]

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் அழகர்சித்தர் என்பவர் ஜலசமாதி அடைந்துள்ளார். இவர் கிணற்றில் இறங்கிய பின்பு அதைக் கண்ட மக்கள் அவரை கிணற்றில் தேடியுள்ளனர். ஆனால் அவர் உடல் கிடைக்கவில்லை. எனவே சித்தர் கிணற்றில் தன்னை கரைத்துக் கொண்டு ஜலசமாதி அடைந்துவிட்டதாக கருதுகிறார்கள்.

இவற்றையும் காண்க

தொகு

ஜீவசமாதி

ஆதாரங்கள்

தொகு
  1. ஜலசமாதி
  2. கம்பளிச் சித்தர் கோயில் வி. சித்திரலேகா - நக்கீரன் 01-04-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலசமாதி&oldid=2715274" இலிருந்து மீள்விக்கப்பட்டது