ஜவ்ஹார் தாலுகா

ஜவ்ஹார் தாலுகா (Jawhar taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜவ்ஹார் நகரம் ஆகும். 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 நகராட்சி மன்றம் மற்றும் 108 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

வரலாறு

தொகு

1948-ஆம் ஆண்டு முன்னர் வரை இத்தாலுகாவின் பகுதிகள் ஜவ்கார் சமஸ்தானத்தில் இருந்தது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜவ்ஹார் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,40,187 ஆகும். மக்கள் தொகையில் 69,333 ஆண்கள் மற்றும் 70,854 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23284 - 17% எண்ணிக்கை ஆகும். சராசரி எழுத்தறிவு 57.42% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 1,445 மற்றும் 1,28,462 ஆகவுள்ளனர். 98% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 96.53%, இசுலாமியர்கள் 2.47%, பௌத்தர்கள் 0.48% மற்றும் பிறர் 0.51% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவ்ஹார்_தாலுகா&oldid=3782768" இலிருந்து மீள்விக்கப்பட்டது