ஜாக்கி செராப்

சாக்கி செராப் (ஆங்கில மொழி: Jackie Shroff) (இந்தி: जैकी श्रॉफ़) (பிறப்பு: 1957 பெப்ரவரி 1)[1] ஓர் இந்திய நடிகர். குஜராத்திய மற்றும் இந்தி திரையுலகில் முப்பதாண்டுகளுக்கும் மேல் இருக்கிறார். 150 இற்கும் அதிகமான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட, வங்காள, மராத்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சாக்கி செராப்
Jackie Shroff.jpg
2007 இல் ஜாக்கி செராப்
பிறப்பு1 பெப்ரவரி 1957 (1957-02-01) (அகவை 65)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று
வாழ்க்கைத்
துணை
ஆயிஷா ஷெராப் (1987-இன்று)

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

செராப் 1957 பெப்ரவரி 1 அன்று குஜராத்திய மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜெய் கிசன் சிவ். இவரின் பெற்றோர் காகுபாய் மற்றும் ரீட்டா செராப்.[1] இவர்கள் மும்பை வால்கேசுவரிலுள்ள டீன் பட்டி பகுதியில் ஒரு குறைந்த வருமான சாவ்லில்(ஒரு வகை அடுக்குமாடிக் குடியிருப்பில்) வாழ்ந்தனர். செராப் திரைத்துறையினுள் நுழையும் முன் உள்ளூர் பயில்வானாக இருந்தார். அத்துடன் ஒரு சில விளம்பரங்களிற்கு வடிவழகராகவும் இருந்தார். ஜாக்கி எனும் திரைப்பெயர் சுபாஷ் கெய் எனும் இயக்குனர்/தயாரிப்பாளரால் ஹீரோ திரைப்படத்தில் செராப்பை அறிமுகப்படுத்திய போது வழங்கப்பட்டது.

எண்பதுகளின் பிற்பகுதியில் தனது நீண்டநாள் காதலியான அயீசா தத்தை மணந்துகொண்டார். அயீசா பின்னாளில் படத்தயாரிப்பாளர் ஆனார். இத்தம்பதியினர் ஜாக்கி செராப் என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனத்தை நடத்துகின்றனர். சொனி தொ.கா இன் 10% பங்குகளை அது தொடங்கியதிலிருந்து கொண்டிருந்தனர், 2012 இல் அப்பங்குகளை விற்க முடிவுசெய்து சொனி தொ.கா உடனான 15 - ஆண்டு இணைவை முடித்துக்கொண்டனர். சராப்பிற்கு இரு பிள்ளைகள் உண்டு, டைகர் ஷெராப் எனும் மகனும், கிருஷ்ணா எனும் மகளும் உள்ளனர்.

சான்றுகோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Jackie Shroff - Biography".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்கி_செராப்&oldid=3180330" இருந்து மீள்விக்கப்பட்டது