ஜாக்ரோஸ் பழையகற்கால அருங்காட்சியகம்

ஜாக்ரோஸ் பழையகற்கால அருங்காட்சியகம் (பாரசீக மொழி: موزه پارینه‌سنگی زاگرس‎‎) ஈரானின் கெர்மான்ஷா நகரில்  2008-ல் நிர்மாணிக்கப்பட்டது.

ஜாக்ரோஸ் பழையகற்கால அருங்காட்சியகத்தின் இரண்டாம் அறையின் உட்புறம்.

இந்த அருங்காட்சியகத்தில் ஈரானின் பல்வேறு பழையகற்கால தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்கருவிகள்  மற்றும் விலங்குகளின் புதைபடிம எலும்புகள்  சேகரிக்கப்பட்டுள்ளன. ஈரானில் இது போன்ற அருங்காட்சியகம் ஒன்றே ஒன்று தான்  உள்ளது.

வரலாறு தொகு

பெரெயிடோன்  பிக்லாரியும், அ. மொராதி பிசெட்டுனியும் இந்த அருங்காட்சியகத்தை ஈரானின் கெர்மான்ஷா நகரில் 2007-ல் நிர்மாணித்தனர். அருங்காட்சியகத்தின் விலங்கு புதைபடிமத்தை இனம் பிரித்தறியும் பொறுப்பு   விலங்குத்தொல்லியலாளர், மார்ஜன் மஷ்கௌரிடம் வழங்கப்பட்டது.

சேகரிப்புகள் தொகு

ஈரானின் பழையகற்கால மற்றும் புதியகற்கால தளங்களின், 1,000,000 இருந்து 8,000 ஆண்டுகளுக்கு முன் திகதியிட்ட, பல்வேறு பொருட்கள் ஜாக்ரோஸ் பழையகற்கால அருங்காட்சியகத்தின் நான்கு அறைகளில் உள்ளன. முதல் அறையானது ஓர் ஒலி அறை. அங்கே பார்வையாளர்களுக்கு கற்கால கருவிகளும், அவை பழையகற்கால கைவினைஞர்களால் எவ்வாறு செய்யப்பட்டன என்பது பற்றியும் ஆவணப்படங்கள் காண்பிக்கபடுகிறது.

மேற்கோள்கள்  தொகு

  • Biglari, F., 2010 The Zagros Paleolithic Museum Guide, Iranian Cultural Heritage, Handicrafts and Tourism Organization, Kermanshah
  • Mashkour, M., H. Monchot, E. Trinkaus, J-L. Reyss, F. Biglari, S. Bailon, S. Heydari, K. Abdi 2009 Carnivores and their prey in the Wezmeh Cave (Kermanshah, Iran): A Late Pleistocene refuge in the Zagros, International Journal of Osteoarchaeology 19: 678-694.