ஜான்சிவாலா இலட்சுமண் ராவ்

இலட்சுமண் ராவ் (Lakhsman Rao) (1904-1959) இவர் ஜான்சியின் மன்னர் கங்காதர் ராவ் மற்றும் ராணி இலட்சுமிபாய் ஆகியோரின் வளர்ப்பு மகனான, தாமோதர் ராவின் மகனாவார்.

ஜான்சிவாலா இலட்சுமண் ராவ்
பிறப்புஇலட்சுமண் ராவ்
1904 (1904)
இறப்பு1959 (அகவை 54–55)

தனது முன்னோர்களின் நிலமான ஜான்சியின் நினைவாக ஜான்சிவாலா என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். இவர் ஒரு துன்பகரமான வாழ்க்கை வாழ்ந்து, இந்தோரில் தட்டச்சு செய்பவராக பணியாற்றினார். [1][2][3] 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் சுதந்திரப் போரில் பங்களித்த இவரது பாட்டி ராணி இலட்சுமிபாயின் நினைவாக 1957 மே 10 அன்று நடைபெற்ற விழாவில் உத்தரபிரதேச அரசு இவருக்கு ஒரு பட்டயமும், பண விருதையும் வழங்கியது. [3][2] இவர் 1959 இல் இறந்தார். கிருஷண் ராவ் மற்றும் சந்திரகாந்த் ராவ் என்ற இரண்டு மகன்கள் இவருக்கு இருந்தனர். [3][2]

மேற்கோள்கள்தொகு

  1. Henry Soszynski (1906-05-28). "JHANSI". மூல முகவரியிலிருந்து 10 July 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-03-29.
  2. 2.0 2.1 2.2 "Jhansi honours its Rani’s descendents" (2015-12-28). பார்த்த நாள் 2017-03-29.
  3. 3.0 3.1 3.2 "The fate of Damodar Rao, the Son of Rani Lakshmi Bai of Jhansi after the war". பார்த்த நாள் 2017-03-29.