ஜான் கப்பேக்
சர் ஜான் ஆசுடன் கப்பேக் (John Hubback)(27 பிப்ரவரி 1878 - 8 மே 1968) என்பவர் ஒடிசாவின் முதல் ஆளுநராக இருந்த பிரித்தானிய நிர்வாகி ஆவார்.[1][2][3][4]
ஜான் கப்பேக் KCSI | |
---|---|
ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 1 ஏப்ரல் 1936 – 11 ஆகத்து 1938 | |
முன்னையவர் | தோற்றுவிக்கப்பட்டது |
பின்னவர் | ஜோர்ஜ் டவுண்செண்ட் பாக் |
பதவியில் 8 திசம்பர் 1938 – 31 மார்ச்சு 1941 | |
முன்னையவர் | ஜோர்ஜ் டவுண்செண்ட் பாக்] |
பின்னவர் | காவ்தோர்ன் லூயிசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1878 |
இறப்பு | 1968 |
தேசியம் | இங்கிலாந்து |
இவர் வின்செஸ்டர் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள கிங்சு கல்லூரியில் கல்வி பயின்றார். கப்பேக் 1902-ல் இந்தியக் குடிமைப் பணியில் நுழைந்தார். 1935 முதல் 1936 வரை பீகார் மற்றும் ஒரிசாவின் நிர்வாகக் குழுவின் உறுப்பினரான இவர், 1936 மற்றும் 1941 காலத்தில் ஒரிசாவின் ஆளுநராக இருந்தார். 1941-ல் ஓய்வு பெற்ற கப்பேக் 1942 மற்றும் 1947 காலத்தில் இந்திய வெளியுறவு செயலாளரின் ஆலோசகராக இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Waltraud Ernst (1 December 2014). Colonialism and Transnational Psychiatry: The Development of an Indian Mental Hospital in British India, c. 1925–1940. Anthem Press. pp. 10–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78308-352-7. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
- ↑ Digambar Mishra (1 January 2003). Political Behavior of Indian State Governors: A Study of the Role of Governor in Orissa. Saṁskṛiti. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87374-19-0. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
- ↑ B. B. Jena. Government and politics in Orissa. Print House (India). பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
- ↑ Sir Stanley Reed. The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.