ஜான் பிர்டு

பிரித்தானியக் கணிதவியல் கருவி புனைவாளர்

ஜான் பிர்டு (John Bird) (1709–1776) ஒரு பிரித்தானியக் கணிதவியல் கருவி புனைவாளர் ஆவ்வார். இவர் பீழ்சப் ஆக்லாந்தில் பிறந்தார். இவர் 1740 இல் இலண்டனுக்கு வந்தார். அங்கு இவர் ஜொனாதன் சிசன் குழுமம், ஜார்ஜ் கிரகாம் கடிகாரக் குழுமம் ஆகிய குழுமங்களில் பணிபுரிந்தார்.[1]இவர் 1745 க்குள் சுட்டிராண்டில் தனியாக வணிகத்தில் ஈடுபடலானார். இவர் 8 அடி வெண்கலக் கோண அளவியைக் கிரீன்விச் அரசு வான்காணகத்துக்காகச் செய்யும்படி பணிக்கப்பட்டார். இது 1750 பிப்ரவரி 16 அன்று நிறுவப்பட்டது. இது இன்றும் பேணிக் காக்கப்படுகிறது. விரைவில் இதன் மறுபடிகள் பிரான்சு, இசுபெயின், உருசியா ஆகிய நாடுகளுக்காகச் செய்யப்பட்டது.

ஜான் பிர்டு, கோண அளவி, (மியூசியோ சிவிக்கோ மாதேனா)
வி. கிரீனின் பொறிப்புருவம்.நன்றி: வெல்கம் திரட்டு
ஒரு சுவரின் மீது கட்டிய மூரல் கால்வட்டம் (கோண அளவி). பிர்டு இதை 1773 இல் உருவாக்கினார். இது ஆக்சுபோர்டில் உள்ள அறிவியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.

புவி நெட்டாங்கு ஆணையர்கள் பிர்டுக்கு 500 பவுண்டுகள்(பெருநிதி) தந்து தரமான கருவிகளோடு ஜேம்சு பிராடுலியையும் உதவிக்கு அனுப்பி 7 ஆண்டுகளுக்குள் அவரது முறைகளையும் உள்ளடக்கிய எழுத்துப்பணியைத் தொடங்குமாறு வேண்டினர். இதற்கான உறுதியாவணத்தையும் பிர்டிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இது பிர்டு கணிதக் கருவிகளைப் பகுத்திடும் முறை (1767), மூரல் கோண அளவிகளைக் கட்டியமைக்கும் முறை (1768) எனும் இரண்டு நூல்களை எழுத வித்திட்டது. இந்த நூல்கள் இரண்டுக்கும் அரசு வானியலாளர் நெவில் மாசுக்கெலைன் முகவுரை எழுதியுள்ளார். நாடாளுமன்றக் கட்டிடம் 1834 இல் எரிந்ததும் , பிர்டு 1758 இலும் 1760 இலும் நிறுவிய செந்தர இருமுழப் (கஜப்) படிமங்களும் அழிந்தன.

பிர்டும் அவரது ஆய்வுறுப்பினர்களான கவுன்ட்டி தர்காமும் கணிதவியலாளரான வில்லியம் எமர்சனும் தாமசு பிஞ்சன் இயற்றிய மேசனும் திக்சனும் எனும் புதினத்தில் தோன்றுகின்றனர்.


மேற்கோள்கள் தொகு

  1. The National Cyclopaedia of Useful Knowledge, Vol III, (1847) London, Charles Knight, p.327.

மேலும் படிக்க தொகு

Bedini, Silvio (1970–80). "Bird, John". Dictionary of Scientific Biography 2. நியூயார்க்: Charles Scribner's Sons. 140-141. ISBN 978-0-684-10114-9. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பிர்டு&oldid=3527034" இலிருந்து மீள்விக்கப்பட்டது