ஜான் விராட்டெசுலி
ஜான் விராட்டெசுலி (John Wrottesley) விராட்டெசுலியின் இரண்டாம் கோமான் (5 ஆகத்து 1798 – 27 அக்தோபர் 1867) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் பிரித்தானிய மாவீரரும்(நைட்)அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1][2]
கோமான் விராட்டெசுலி The Lord Wrottesley பிரித்தானிய மாவீரர்(நைட்) பட்டம், அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் | |
---|---|
பிறப்பு | வோல்வர்காம்ப்டன் | 5 ஆகத்து 1798
இறப்பு | 27 அக்டோபர் 1867 | (அகவை 69)
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | வானியல் |
விருதுகள் | அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1839) |
28 ஆம் அரசு வானியல் கழகத் தலைவர் | |
பதவியில் 1854–1858 | |
முன்னையவர் | வில்லியம் பார்சன்சுசூரோசேவின் மூன்றாம் கோமான் |
பின்னவர் | சர் பெஞ்சமின் காலின்சு புரோதி, முதலாம் கோமகன் |
வாழ்க்கை
தொகுவிராட்டெசுலி முதலாம் கோமான் ஜான் விராட்டெசுலியின் மகன் ஆவார். இவர்து முதல் மனைவி, சீமாட்டி கரோலின் பென்னெட் தான்கர்வில்லியின் நான்காம் கோமான் ஆகிய சார்லசு பென்னெட்டின் மகள் ஆவார். விராட்டெசுலி தன் தந்தைக்குப் பிறகு 1841 மார்ச்சு, 16 இல் அடுத்த கோமான் ஆனார்.
இவர் வானியலில் ஆற்றிய பங்களிப்புக்காகத் தனிபெருமை பெற்றவர் ஆவார். இவர் அரசு வானியல் கழகத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவராவார். இவர் அந்நிறுவனத் தலைவராக 1841 முதல் 1842 வரை இருந்தார். இவர் 1839 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தை 1318 விண்மீன்கலின் வல ஏற்றத்துக்கான அட்டவணையை உருவாக்கியதற்காகப் பெற்றார். இவர் 1853 இல் மத்தேயு பான்டைன் மவுரி வானிலையியல் நோக்கீடுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான திட்டம் பற்றிய கவன ஈர்ப்பை பிரபுக்களின் அவையில் கொண்டு வந்தார். இவர் 1855 நவம்பர் 30 இல் அரசு வானியல் கழகத் தலைவராக இருந்தபோது, உரோசேவின் கோமகன் ஆனார்.[3]
நிலாவின் விராட்டெசுலி குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
இவர் 1867 அக்தோபர் மாதத்தில் தனது 69 ஆம் அகவையில் இறந்தார்.
குடும்பம்
தொகுஇவர் 1821 ஜூலை 28 இல் சோபியா எலிசபெத்தை(இறப்பு: 13 ஜனவரி, 1880) மணந்தார். வ்சோபியா எலிசபெத்த் சுட்டாபோர்டுசயர் நகரச் சில்லிங்டன் சேர்ந்த கிப்பார்டின் மூன்றாம் மகள் ஆவார். இவர்களுக்கு ஐந்துமகன்களும் இரண்டு மகளும் உண்டு. இவரது இளம் மகன்களான என்றியும் கேமரானும் போரில் கொல்லப்பட்டனர். இவருக்குப் பிறகு இவரது மூத்த மகனான ஆர்த்தர் விராட்டெசுலி மூன்றாம் கோமகன் ஆனார்.[4] ஜார்ஜ் வாட்டெசுலி இவரது மூன்றாம் மகன் ஆவார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Armitage, J. (2006). "Lord John, 2nd Baron Wrottesley and the Wrottesley Hall Observatory". The Antiquarian Astronomer (Society for the History of Astronomy) 3: 5–10. Bibcode: 2006AntAs...3....5A.
- ↑ "John, Second Baron Wrottesley". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 28 (4): 64–68. 1868. http://articles.adsabs.harvard.edu/full/seri/MNRAS/0028//0000064.000.html. பார்த்த நாள்: 18 November 2015.
- ↑ Men of the Time, Biographical Sketches of Eminent Living Characters; London: David Bogue, Fleet Street. (1856) p.793
- ↑ "Wrottesley, John". Dictionary of National Biography 63. (1900). London: Smith, Elder & Co.
- ↑ வார்ப்புரு:Cite DNB12