ஜான் வெசுட்டுவிக்

ஜான் வெசுட்டுவிக் (John Westwyk) (/wɛstwɪk/; (அல்லது வெசுட்டுவிக் நகர ஜான் எனவும் அழைக்கப்படுபவர்) Latin: யோகான்னசு தெ வெசுட்டுவைக் (1350-.1400) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் பெனெடிக்டைன் துறவியும் Equatorie of the Planetis எனும் நூலின் ஆசிரியரும் ஆவார்.

ஜான் வெசுட்டுவிக்
John Westwyk
பிறப்புஅண். 1350
கோற்காம் வெசுட்டுவிக், எர்ட்போர்டுசயர், இங்கிலாந்து
இறப்புஅண்.1400
புனித அல்பான்சு அபே
பணிதுறவி, வானியலாளர், கருவியாக்குநர், கணிதவியலாளர்

வாழ்க்கை தொகு

இவரது இளமை குறித்த தகவலேதும் கிடைக்கவில்லை. வெசுட்டுவிக் என்பதும் இடப்பெயரே ஆகும்; புனித அல்பான்சுக்கு இருகல் தொலைவில் உள்ள கோற்காம் வெசுட்டுவிக்கில் இவர் வந்திருக்கலாம்.[1] இவர் 1368 அளவில் புனித அல்பான்சு அபேயின் துறவியாக இருந்துள்ளார். இவர்ஐப்பதவியில் 1368 முதல் 1379 வரை இருந்திருக்க வாய்ப்புண்டு.[2] மற்ற துறவிகளைப் போலவே இவரும் இடைத்தட்டு உழவராமல்லது இயோமன்னாக இருக்கலாம்.[3]

இவர் அபேவுடன் தொடர்புள்ள அல்மோன்றி பள்ளியில் அடிப்படைக் கல்வி பயின்றிருக்கலாம். மற்ற பத்து விழுக்காட்டு புனித அல்பான்சு துறவிகளைப் போலவே இவரும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்திருக்கலாம்.[4]. இவர் புனித அல்பான்சு அபேயில் வானியல் படித்துள்ளார் என்பது உறுதி. அங்குள்ளபோது இவர் இரண்டு வானியல் நூல்களை எழுதியுள்ளார். [5] இந்த இருநூல்களிலும் முந்தைய வானியலாளர் வாலிங்குபோர்டு நகர இரிச்சர்டின் (1927-1936) தாக்கம் உள்ளதைக் காணலாம். அபே மடப் புலமை வாழ்க்கையில் இவரது தாக்கம் நெடுங்காலமாக நிலவியது. [6]

வெசுட்டுவிக் 1380 முதல் 1383 வரை நார்த்தம்பிரியாவில் உள்ள தைனெமவுத் பிரியரியில் துறவியாக இருந்தார்.[7] தைனெமவுத் புனித அல்பான்சு அபேயைச் சேர்ந்த மடப்பிரிவாகும். இவ்விடத்துக்குத் தாய்மடத்தில் இருந்து துறவிகள் தண்டனையின் பேரிலோ தங்களது திறமையை முழுமையாக நிறுவவோ அனுப்பப்படுவதுண்டு.[8] தைனெமவுத்தில் வெசுட்டுவிக் தன் ஆய்வைத் தொடர்ந்தார்; இரு கையெழுத்துப்படிகளை உருவாக்கினார்.[9] இவர்1383 இல் தற்காப்பணியில் சேர்ந்து, கிரேவிலயன்சைக் கைப்பற்றி, தைப்பிரெசில் கோட்டைவிட்டார். தோல்வியுற்ற காப்பணியில் இருந்து பாதுகாப்பக தப்பியதாக புனித அல்பான்சு அபேயின் வரலாற்றாசிரியரான தாமசு வால்சிங்காம் கூறுகிறார்.[10]

வெசுட்டுவிக் பற்றிய தகவலேதும் 1383-93 காலகட்டத்தில் கிடைக்கவில்லை. என்றாலும், 1393 இல் இவர் கோளரங்க வடிவமைப்புக்கான பட்டியல்களையும் பயிற்சிக் கட்டளைக் கையேட்டையும் உருவாக்கினார்; இது Equatorie of the Planetis எனப்பட்டது.[11] இந்த வடிவமைப்பும் பட்டியல்களும் இவர் இலண்டனில் உள்ள பிராடு தெருவில் இருந்த புனித அல்பான்சு விடுதி அறையில் இருந்து பணிபுரிந்ததை நிறுவுகின்றன.[12] இவரது வடிவமைப்பு முந்தைய ழீன் தெ இலிகுனியேர்சின் வடிவமைப்ப்பைப் பின்பற்றியதாகவும் இப்போது ஆக்சுபோர்டு மெர்ட்டன் கல்லூரி நூலகத்தில் உள்ளதை ஒத்தும் உள்ளது. என்றாலும் இது முந்தைய படிமங்களை விட எளிதாகவும் பயனர்நட்புடையதாக அமைந்துள்ளது.[13] ஏனவே, இதை இவரே கட்டியமைத்துள்ளார். என்றாலும், இது முழுமையாக உண்மை அளவையொட்டிய விகிதத்தில் அமையவில்லை.[14] இவரது பயன்பாட்டு விதிமுறைகள் இடைக்கால ஆங்கிலத்தில் வானியலுக்காக ஜியோப்பிரே சாசர் தன் வான்கோள நூலுக்காக உருவாக்கிய நடையில் அமைந்துள்ளது. மேலும், இவர் சாசரை பெயரிட்டு அழைக்கிறார்.[15] இதன் பின்னிணைப்புப் பட்டியல்கள் துல்லியமான கணக்கீடுகளோடு செப்பமாகப் படியெடுக்கப்பட்டுள்ளதை விளக்குகின்றன.[16]

பிறகு, இவர் கடைசியில் புனித அல்பான்சு அபேவுக்கே திரும்பிவிட்டதாகத் தெரிகிறது. இவர் அபேயின் துறவியாக 1397 மே காலமிட்ட பாப்பிரசுத் தாள் அங்கே கிடைத்துள்ளது. இவர் வாழ்நாள் இறுதிமட்டும் அங்கேயே வாழ்ந்திருக்கலாம்.[17] இதற்குப் பின்னர் இவரைப் பர்றிய தகவலேதும் கிடைக்கவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அவர் அங்கேயே இறந்திருக்கலாம்.

தற்கால ஆய்வு தொகு

வெசுட்டுவிக்கின் Equatorie கையெழுத்துப்படி கேம்பிரிட்ஜ் பீட்டர்கவுசு நூலகத்தில் 1538 இல் ஏன் 1472 அளவிலேயே இருந்துள்ளது.[18][19] வரலாற்றாசிரியர் தெரேக் தெ சோல்லா பிரைசு 1951 இல் இதைக் கண்டறிந்து உலகளாவிய தலைப்புச் செய்திகளை வெளியட வைத்தார்.[20] பிரைசு இது ஜியோப்பிரே சாசரின் கையால் எழுதிய படியெனவும் நூலாசியரும் அவரே எனவும் நம்பியுள்ளார்.[21] இது முரண்பட்ட உரிமைபாராட்டல்; இதை சாசரின் மாணவ ஆசிரியர்களே ஐயுறவுடன் நோக்கினர்.[22] இம்முடிவு வானியல் வரலாற்றாசிரியர் ஜான் நார்த்தின் தாக்கத்தால் விளைந்ததாகும். [23] காரி ஆன்னி இரேண்டு 2014 இல் இந்தக் கையெழுத்துப்படி வெசுட்டுவிக்கின் கையில் இருந்ததாக காட்டியுள்ளார்.[24][25] செபு பைக்கு 2020 இல் வெசுட்டுவிக்கின் முழுவாழ்க்கை வரலாற்றையும் எழுதி, இவரது வாழ்க்கைக்கும் பனிகளுக்கும் புதிய சான்றை வெளிப்படுத்தியுள்ளார்.[26]

தகவல் வாயில்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Rand 2015, ப. 19.
  2. Falk 2020, ப. 79.
  3. Falk 2020, ப. 18.
  4. Clark, James G. (2004). A Monastic Renaissance at St. Albans: Thomas Walsingham and His Circle, c. 1350–1440. Oxford University Press. பக். 65. 
  5. Oxford, Bodleian Library, MS Laud Misc. 657, ff. 1v-52v; Oxford, Corpus Christi College, MS 144, f. 80r.
  6. Falk, Seb (2019). "'I found this written in the other book': Learning Astronomy in Late Medieval Monasteries". Studies in Church History 55: 129–44, at 134. doi:10.1017/stc.2018.18. https://www.repository.cam.ac.uk/handle/1810/299510. 
  7. Falk 2020, ப. 162.
  8. Rand 2015, ப. 21-23.
  9. Cambridge, Pembroke MS 82, f. 1r; London, British Library Harley MS 4664, f. 125v.
  10. Walsingham, Thomas (1867). Gesta Abbatum monasterii Sancti Albani, ed. H. T. Riley. London: Rolls Series. பக். II:416. 
  11. Cambridge, Peterhouse MS 75.I
  12. Falk 2020, ப. 242.
  13. Falk 2020, ப. 273-9.
  14. Falk 2020, ப. 269.
  15. Rand Schmidt 1993, ப. 14, 40-6.
  16. Falk, Seb (2016). "Learning Medieval Astronomy through Tables: The Case of the Equatorie of the Planetis". Centaurus 58 (1–2): 6–25. doi:10.1111/1600-0498.12114. 
  17. Rand 2015, ப. 25.
  18. Cambridge, Peterhouse MS 75.I
  19. Rand Schmidt 1993, ப. 112-3.
  20. Falk, Seb (2014). "The scholar as craftsman: Derek de Solla Price and the reconstruction of a medieval instrument". Notes and Records of the Royal Society 68 (2): 111–134. doi:10.1098/rsnr.2013.0062. பப்மெட்:24921105. 
  21. Price 1955, ப. 3.
  22. Edwards, A.S.G.; Mooney, Linne R. (1991). "Is the "Equatorie of the Planets" a Chaucer Holograph?". The Chaucer Review 26 (1): 31–42. http://www.jstor.org/stable/25094179. 
  23. North 1988, ப. 169-77.
  24. Bridge, Mark (18 June 2020). "'Forgotten' monk paved the way for Copernicus". The Times. https://www.thetimes.co.uk/article/forgotten-monk-paved-the-way-for-copernicus-twmm0mk3m. 
  25. Rand 2015.
  26. Falk 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வெசுட்டுவிக்&oldid=3794317" இலிருந்து மீள்விக்கப்பட்டது