ஜான் ஸ்டைத் பெம்பர்டென்

ஜான் ஸ்டைத் பெம்பர்டென் (சூலை 8, 1831 - ஆக்சுடு 1888) என்பவர் அமெரிக்க மருந்தியலாளர் ஆவார். கொக்கக் கோலா என்னும் குளிர் பானத்தை முதன் முதலாகச் செய்தவர் ஆவார். பெம்பர்டென் இறப்பதற்கு முன் கொக்கக் கோலா தயாரிக்கும் உரிமையை விற்றுவிட்டார்.

ஜான் ஸ்டைத் பெம்பர்டென்

பிறப்பும் படிப்பும்தொகு

சியார்சியாவில் பிறந்த பெம்பர்டென் ரோமிலும் சியார்சியாவிலும் வளர்ந்தார். சியார்சியாவில் உள்ள ரீபாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வேதியலை அவர் விரும்பியிருந்தாலும் மருந்தியலைப் படித்துப் பட்டம் பெற்றார்.[1] மருந்துகள் தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றார். அமெரிக்காவில் சிவில் போர் நடந்தபோது அமெரிக்கப் படையில் சேர்ந்தார். மார்பில் அடிபட்டுக் காயமுற்றார். வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வலி போக்கும் மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கி, அதற்கு அடிமை ஆனார்.

மேற்கோள்தொகு

  1. King, Monroe M. "John Stith Pemberton (1831-1888)." New Georgia Encyclopedia. 13 June 2017. Web. 11 September 2017.