ஜிக்னேசு மேவானி
ஜிக்னேசு மேவானி(Jignesh Mevani) என்பவர் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ஆவார். இவர் ஒரு வழக்கறிஞரும் அம்பேத்கரியக் கொள்கையாளரும் ஆவார்.[1]
தலித் அசுமிதா யாத்திரையை முன்னின்று நடத்தினார். குசராத்து மாநிலத் தலைநகர் ஆமதாபாத்திலிருந்து சவுராட்டிர உனா வரை அந்த யாத்திரை செலுத்தப்பட்டது. அப்போராட்டத்தில் இறந்த மாடுகளை இனி அப்புறப் படுத்தப் போவதில்லை என 20000 தலித் மக்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.