முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜிஜாபாய் ஷாகாஜி போஸ்லே (Jijabai Shahaji Bhosale) ( 12 சனவரி 1598 – 17 சூன் 1674), மராத்தியப் பேரரசின் நிறுவனர் சிவாஜியின் அன்னையாவார்.

ஜிஜாபாய்
Shivaji jijamata.JPG
ஜிஜாபாய் மற்றும் சிறுவன் சிவாஜியின் சிலை
பிறப்புஜிஜாபாய்
சனவரி 12, 1598(1598-01-12)
ஜிஜாவு மகால், சிந்த்கேத் ராஜா, புல்தானா, மகாராட்டிரம், இந்தியா
இறப்பு17 சூன் 1674(1674-06-17)
பச்சாத்
மற்ற பெயர்கள்ஜிஜாமாதா, ராஜமாதா
அறியப்படுவதுராஜமாதா
பெற்றோர்லக்கோஜிராவ் ஜாதவ் - மகாளசபை
வாழ்க்கைத்
துணை
ஷாகாஜி போஸ்லே
பிள்ளைகள்சிவாஜி
சம்பாஜி

குடும்பம்தொகு

ஜிஜாபாய் - ஷாகாஜி போஸ்லே இணையருக்கு ஆறு மகள்களும், சம்பாஜி மற்றும் சிவாஜி என இரண்டு மகன்களும் பிறந்தனர்.

சிவாஜிக்கு மூன்று வயது இருக்கையில் ஜிஜாபாயின் கணவரும், சிவாஜியின் தந்தையுமான சகாஜி போஸ்லே, துக்காபாய் என்பவரை 1630-இல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, இரண்டாம் மனைவி மற்றும் சம்பாஜியுடன் தனியாக வாழ்ந்தார்.

1644ல் சகாஜி, பூனேயில் தன் முதல் மனைவி ஜிஜாபாய் மற்றும் இளைய மகன் சிவாஜிக்கும் லால் மஹால் எனும் அரண்மனை கட்டி குடியமர்த்தினார்.

சிவாஜி மீதான அக்கறைதொகு

தாய்நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் உறுதியான பற்று கொள்ளும்வகையில் ஜிஜாபாய், சிவாஜிக்கு தமது பாடங்களுடன் கருத்துளைக் கூறி ஓர் அழிக்க முடியாத நம்பிக்கையை அவருக்குள் உருவாக்கினார். சுய-மரியாதை மீதான ஓர் இயற்கையான பற்றையும், அன்னிய அரசியல் செல்வாக்கின் மீதான வெறுப்பையும் ஜிஜாபாய், சிவாஜிக்கு ஊற்றி வளர்த்தார். சொந்த கலாச்சாரத்தின் மீதான அவரின் பற்றும், பொறுப்பும், அத்துடன் சிறந்த இந்திய புராணங்களான மகாபாரதம், இராமாயணத்தில் போன்றவற்றிலஇருந்து எடுத்துக்கூறிய கதைகளும் சிவாஜியின் பண்பை வடிவமைத்தன.

மறைவுதொகு

ஜிஜாபாயின் மூத்த மகன் சம்பாஜி ஒரு முற்றுகைப் போரில், அப்சல் கான் எனும் படைத்தலைவனால் கொல்லப்பட்டார். சிவாஜி மராத்தியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்ட பின்னர் ஜிஜாபாய், 17 சூன் 1674-இல் உயிர் துறந்தார்

மரபுரிமைப் பேறுதொகு

  • ஜிஜாபாய் சிவாஜியை வீரத்துடன் வளர்த்த முறைகள் குறித்தான நாட்டுப்புற பாடல்கள் மகாராட்டிரா மாநிலத்தில் பாடப்படுகிறது.
  • 2011-ஆம் ஆண்டில் ஜிஜாபாயின் வரலாறு குறித்தான இராஜமாதா ஜிஜாபாய் எனும் திரைப்படம் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஜாபாய்&oldid=2630054" இருந்து மீள்விக்கப்பட்டது