ஜி. லட்சுமணன்
ஜி. லட்சுமணன் (G. Lakshmanan) தமிழகத்தைச் சேர்ந்த தடகள ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 2017 ஆம் ஆண்டு நடந்த 22 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவுகளில் தங்கம் வென்றவர்.[1][2]
22 ஆவது ஆசிய தடகளப் போட்டி
தொகு- 5,000 மீட்டர் போட்டியில் பந்தய தூரத்தை 14 நிமிடங்கள் 54.48 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் காரணமாக, 2017 ஆம் ஆண்டின் ஆகத்து மாதம் லண்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.[3]
- ஆசிய தடகளப் போட்டிகளில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஆகிய இரு ஓட்டப் பந்தயப் பிரிவுகளிலும் தங்கம் வென்ற ஒரே இந்தியர் எனும் பெருமையும் இவருக்குக் கிடைத்தது.[4]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது இளம் வயதில் புதுக்கோட்டை நகரத்துச் சாலைகளில் வெறுங்காலில் ஓடி பயிற்சி பெற்றார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன், இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆசிய தடகளம்: தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார்! முதல் நாளில் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்". ஒன் இந்தியா (தமிழ்). 7 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2017.
- ↑ "Double joy for Lakshmanan; India tops table". தி இந்து. 9 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2017.
- ↑ "ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை". தினத் தந்தி. 7 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2017.
- ↑ "Double joy for Lakshmanan; India tops table". தி இந்து. 12 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2017.
- ↑ "வெறுங்கால்களுடன் ஓடி பயிற்சி: வறுமையுடன் போராடி இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த தமிழக வீரர் லட்சுமணன்". தி இந்து (தமிழ்). 8 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2017.
வெளியிணைப்புகள்
தொகு- வெறுங்காலில் ஓடிய லட்சுமணன், இன்று ஆசிய சாம்பியன்! - தடகள தமிழன், காணொளியைக் கொண்டுள்ள செய்தித் தொகுப்பு, விகடன்.காம்