ஜீவன் பிரமான்

ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) என்பது இந்தியாவில் ஆதார் மூலம் வழங்கப்படும் ஒரு எண்ணிம வாழ்வுரிமை சான்றிதழ் ஆகும் .இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் நாட்டு மக்களுக்கு 2014 நவம்பர் 10 அன்று இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள். டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழ் சமர்ப்பிப்பது மூலம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டிய வாழ்வுரிமை சான்று எண்ணிம மயமாக்கப்பட்டு உள்ளது .இந்த சேவையைப் பெற அருகில் உள்ள பொதுசேவை மையங்களை அணுகிப் பெறக்கூடியதாக உள்ளது.[1] மேலும் பல தகவல்கள் மற்றும் சேவை குறித்த அரசாணைகள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.[2]

ஜீவன் பிரமான்
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
துவங்கியது10 நவம்பர் 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-11-10)

எண்ணிம வாழ்வுரிமை சான்றிதழ் பயனாளிகள் பட்டியல் தொகு

  • மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்
  • மாநில அரசு ஓய்வூதியதாரர்கள்
  • பொது துறை ஓய்வூதியதாரர்கள்

சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் தொகு

  • ஓய்வூதிய கொடுப்பாணை எண்
  • ஆதார் எண்
  • வங்கி கணக்கு புத்தகம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவன்_பிரமான்&oldid=3850591" இலிருந்து மீள்விக்கப்பட்டது