ஜுலியஸ் பூசிக்

ஜுலியஸ் பூசிக் (Julius Fucik) (23 பிப்ரவரி 1903 – 8 செப்டம்பர் 1943) ஒரு‍ பத்திரிகையாளர். செக்கோஸ்லோவோக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர். (Communist Party of Czechoslovakia) (Komunistická strana Československa, KSČ) , மற்றும் நாஜி எதிர்ப்பு முன்னணியின் ஒரு‍ பகுதியாகவும் செயல்பட்டார். அதனால், நாசிஸ்ட்டுகளால் சிறையிலடைக்கப்பட்டு, கொடுமைகள் செய்து‍ இறுதியில் தூக்கிலிடப்பட்டார்.[1]

ஜுலியஸ் பூசிக்
ஜுலியஸ் பூசிக்
பிறப்பு(1903-02-23)23 பெப்ரவரி 1903
பராகுவே, ஆஸ்த்திரிய-ஹங்கேரி
இறப்புவார்ப்புரு:இறப்பு மற்றும் வயது‍
பெர்லின், நாஜி ஜெர்மனி
தொழில்பத்திரிகையாளர்
குடியுரிமைஆஸ்திரியா, செக்கோஸ்லோவோக்கியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்தூக்குமேடைக் குறிப்புகள்
thump
thump

வாழ்க்கை வரலாறு‍ தொகு

செக்கோசிலோவாக்கியா நாட்டில் 1903 ஆம் ஆண்டு‍ பிறந்தார். 12 வயதிலேயே கதைகளும் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்தார். செக்கோசிலோவாக்கியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் முக்கிய உறுப்பினராகவும் ஆனார். இலக்கியம், இசை, கலை ஆகியவற்றை கற்றார். பல பத்திரிகைகளுக்கு‍ கட்டுரைகள் எழுதியுள்ளார். செக்கோசிலோவாக்கியா கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். 1929 ஆம் ஆண்டு‍ சுரங்கத் தொழிலாளரின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்.[2]

சோவியத் பயணம் தொகு

தொழிலாளர் சங்கப் பிரதிநிதியாக 1930 ஆம் ஆண்டு‍ சோவியத்து‍ யூனியனுக்குச் சென்றார். ஆறுமாத காலம் அங்கு‍ தங்கினார். தாய்நாடு‍ திரும்பியதும் வருங்காலம் பழங்காலம் ஆகிவிட்ட நாடு‍ என்ற நூலை எழுதினார்.[3]

தலைமறைவு தொகு

1938 ஆம் ஆண்டு‍ கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பத்திரிகைகளும் சட்டவிரோதமாக்கப்பட்டன. அதனால் தலைமறைவாகச் சென்று‍ ஒரு கிராமத்தில் வசித்தார். 1941 இல் பூசிக்கும் அவரது‍ கட்சியினரும் நாசிஸ்ட்டுகளால் தடை செய்யப்பட்ட பத்திரிகைகளை வெளியிட்டனர்.[4]

தூக்கு‍ தொகு

இட்லரின் ரகசிய காவல்துறை 1942 இல் பூசிக்கை கைது‍ செய்தது. சிறையிலிருந்த போது‍ தூக்குமேடைக் குறிப்புகள் என்ற உலகப் புகழ்பெற்ற நூலை எழுதினார். 1943 செப்டம்பர் 8 ஆம் தேதி பூசிக் பெர்லினில் தூக்கிலிடப்பட்டார். அவரது‍ மரணத்திற்குப் பிறகு‍ 1950 இல் சர்வதேச சமாதானப் பரிசு‍ வழங்கப்பட்டது.[5]

கட்டுரைகள் தொகு

  1. மாநிலத்தீர்! விழிமின், எழுமின் (People Be On Your Guard)
  2. தூக்குமேடைக் குறிப்புகள்
  3. வருங்காலம் பழங்காலம் ஆகிவிட்ட நாடு‍

மேற்கோள்கள் தொகு

  1. Marta, Nono's life, p.32
  2. சண்முகம், எஸ்(பிப்ரவரி 2008). "ஆசிரியர் வரலாறு‍". வீர நினைவுகள் ஜுலியஸ் பூசிக், 88, சென்னை:என்சிபிஎச். 2014, மார்‌ச், 03 அன்று அணுகப்பட்டது..
  3. சண்முகம், எஸ்(பிப்ரவரி 2008). "ஆசிரியர் வரலாறு‍". வீர நினைவுகள் ஜுலியஸ் பூசிக், 88, சென்னை:என்சிபிஎச். 2014, மார்‌ச், 03 அன்று அணுகப்பட்டது..
  4. சண்முகம், எஸ்(பிப்ரவரி 2008). "ஆசிரியர் வரலாறு‍". வீர நினைவுகள் ஜுலியஸ் பூசிக், 88, சென்னை:என்சிபிஎச். 2014, மார்‌ச், 03 அன்று அணுகப்பட்டது..
  5. சண்முகம், எஸ்(பிப்ரவரி 2008). "ஆசிரியர் வரலாறு‍". வீர நினைவுகள் ஜுலியஸ் பூசிக், 88, சென்னை:என்சிபிஎச். 2014, மார்‌ச், 03 அன்று அணுகப்பட்டது..
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுலியஸ்_பூசிக்&oldid=2713354" இருந்து மீள்விக்கப்பட்டது