ஜூஹி சாவ்லா

இந்திய நடிகை

ஜூஹி சாவ்லா (Juhi Chawla, பிறப்பு: நவம்பர் 13, 1967) பல விருதுகளை வென்ற ஓர் இந்திய நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார்.

ஜூஹி சாவ்லா

இயற் பெயர் ஜூஹி சாவ்லா
பிறப்பு நவம்பர் 13, 1967 (1967-11-13) (அகவை 56)
லூதியானா, பஞ்சாப், இந்தியா
தொழில் நடிகை/திரைப்படத் தயாரிப்பாளர்/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
நடிப்புக் காலம் 1986–இன்றி
துணைவர் ஜெய் மேத்தா (1997- )

1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சாவ்லா நடிகை ஆனார். அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் குயாமத் செ குயாமத் டக் மற்றும் தர் முதல் ஹம் ஹைன் ரகி பியார் கி , வரை காதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். யெஸ் பாஸ் மற்றும் இஷ்க் திரைப்படங்கள் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தன.[1][2] சாவ்லா அவரது நேர உணர்வுடைய நகைச்சுவையால் திரைப்படங்களில் பெரிதும் கவனிக்கப்பட்டார். மேலும் ஓர் உற்சாகமான பெண்ணாகத் திரையில் காணப்பட்டார்.[3][4]

2000 ஆண்டுகளின் போது 70 முக்கிய இந்தி படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு சாவ்லா கலை மற்றும் சார்பிலா திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தாய் மொழியான பஞ்சாபி திரைப்படங்களில் நடித்த அவர் மேலும் அதிகமாக மற்ற திரைப்படங்களிலும் நடித்தார்.[4] அவருடைய திறமை ஜானகர் பீட்ஸ், 3 தீவாரின், மை பிரதர் நிகில் மற்றும் பஸ் ஏக் பல் திரைப்படங்களின் மூலம் விமர்சன ரீதியான அங்கீகரிப்பைப் பெற்றது.[5] சாவ்லா 2000 ஆம் ஆண்டிலிருந்து, திரைப்படத் தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்கினார்.

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

ஜூஹி சாவ்லா இந்தியாவில், பஞ்சாபில் உள்ள லூதியானாவில் பிறந்தார். இவர் மருத்துவர். எஸ். சாவ்லாவுக்கும், மோனா சாவ்லாவுக்கும் பிறந்த முதல் குழந்தை ஆவார்.

இவர் மும்பையில் உள்ள சைதன்கம் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார்.[6] இவர் 1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பிறகு 1984 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சிறந்த ஆடை அலங்காரத்திற்கான விருது பெற்றார்.[7]

தொழில் வாழ்க்கை

தொகு

திரைப்படம்

தொகு

சாவ்லா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற பிறகு துணிச்சலுடன் 1986 ஆம் ஆண்டு வெளியான சுல்டனட் எனும் படத்தில் நடித்தார். 1988 ஆம் ஆண்டு பாலிவுட்டில் குயாமத் செ குயாமத் டக் எனும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் அமீர் கானுடன் நடித்தார். ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட்டை தழுவி தற்கால நாகரிகத்திற்குத் தகுந்தவாறு எடுக்கப்பட்ட அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படம் பிலிம்பேரின் சிறந்த படத்திற்கான விருதை வென்றது. மேலும் சாவ்லா பிலிம்பேரின் லக்ஸ் புதுமுக விருதை வென்றார். மேலும் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு முதல் முறையாகப் பரிந்துரைக்கப்பட்டார்.[8] பின்னர் அந்தப் படம் மிகவும் புகழ் பெற்றது.[9] [10]

1990 ஆம் ஆண்டு இவர் பிரதிபந்த் எனும் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது. மேலும் அந்தத் திரைப்படத்திற்காக பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அந்த ஆண்டில் சுவர்க் எனும் திரைப்படத்திலும் நடித்தார்.[11] 1992 ஆம் ஆண்டு வணிக ரீதியாக வெற்றி பெற்ற போல் ராதா போல் படத்திற்காக பிலிம் பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[12][13]

1993 ஆம் ஆண்டு இவர் நடித்த லுட்டெர் மற்றும் ஆய்னா படங்கள் ஒரளவு வெற்றியை பெற்றன. மேலும் மகேஷ் பட்டின் ஹிட் படமான ஹம் ஹைன் ரகி பியார் கி திரைப்படத்திலும் நடித்தார்.[14] இவர் முன்னணிப் பாத்திரத்தில் நடித்த யாஷ் சோப்ராவின் திரில்லர் திரைப்படமான தர், அந்த வருடத்தில் இந்தியாவில் மூன்றாவது அதிக வசூலைப் பெற்ற படமாக அமைந்தது.[14] ஹம் ஹைன் ரகி பியார் கி படத்தில் அவரது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.[15] 1994 ஆம் ஆண்டில் இருந்து 1996 ஆம் ஆண்டு வரை வெளியான சாவ்லாவின் படங்கள் வெற்றிபெறவில்லை. இருந்த போதும் கொடுமைப்படுத்தப்படும் மனைவியாக தரார் படத்தில் நடித்ததற்காக அவரின் சிறந்த நடிப்பிற்கு பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[16] 1997 ஆம் ஆண்டு இவர் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படங்களான யெஸ் பாஸ் , திவானா மஸ்தானா மற்றும் இஷ்க் மூலம் மீண்டும் நல்ல நிலைக்கு வந்தார். இஷ்க் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் சாவ்லா யெஸ் பாஸ் படத்தில் மாடலாக நடித்ததற்காக ஆறாவது முறையாக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[17][18]

திரையில் சாவ்லா அமீர்கான் ஜோடி வெற்றிகரமானது என ஊடகங்களால் அடிக்கடி புகழப்பட்டது.[19] மேலும் இவர் சாருக்கானுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ராஜூ பன் கயா ஜென்டில்மேன் படத்திலும் பிறகு தர் மற்றும் யெஸ் பாஸ் படங்களிலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். 2000 ஆம் ஆண்டில் சாவ்லா கலை மற்றும் சார்பிலா படங்களில் நடிக்கத்தொடங்கினார். மேலும் அவர் நடித்த 3 தீவாரின் , 7½ பீர் மற்றும் மை பிரதர் நிகில் படங்களில் அவரது பங்களிப்பு வணிக ரீதியாக பாராட்டப்பட்டது. இது "அவரது தொழில் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணம்" என தரண் ஆதர்ஷால் குறிப்பிடப்பட்டது.[20][21][22] இவர் சிறந்த துணை நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருதை 3 தீவாரின் படத்திற்காக பெற்றார்.

நிகில் அத்வானியின் ஸலாம்-ஈ-இஷ்க் : எ ட்ரிபியூட் டூ லவ் படத்தில் திறமையாக நடித்ததற்காக நல்ல விமர்சனங்கள் அவருக்கு கிடைத்தது.[23] இவர் ஊர்மிளா மடோன்கருடன் பஸ் ஏக் பல் (2006) திரைப்படத்திலும் மனோஜ் பஜ்பாயுடன் சுவாமி திரைப்படத்திலும் நடித்தார். ஜூஹியின் சமீபத்திய வெளியீட்டில் அமிதாப் பச்சனுடன் நடித்துள்ள ரவி சோப்ராவின் பூத்நாத் படமும் அடங்கும். அதில் அவர் "சலோ ஜானே து" என்ற பாடலையும் பாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த க்ரேசி 4 திரைப்படத்தில் இர்பான் கான் மற்றும் அர்சத் வர்சியுடன் நடித்துள்ளார். பூத்நாத் மற்றும் க்ரேசி 4 படங்கள் இந்தியாவில் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. 2009 ஆம் ஆண்டு லக் பை சான்ஸ் படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்காக இவர் தன் தலைமுடியை நிறம் மாற்ற வேண்டி இருந்தது. இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபீஸில் ஒரு நல்ல துவக்கத்தை தந்தது.[24]

சாவ்லா இந்தி மட்டுமல்லாமல் பல்வேறு பிறமொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள மூன்று பஞ்சாபி திரைப்படங்கள்: சாகித் உத்தம் சிங் (2000), தேஷ் ஹொயா பர்தேஷ் (2004) மற்றும் வரிஷ் ஷா: இஷ்க் த வாரிஷ் (2006) ஆகும். இவரின் முதல் மலையாள படமான ஹரிகிருஷ்ணன்ஸில் , மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் நடித்துள்ளார். இவரின் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். அதில் "பிரேமலோகா" திரைப்படம் வெற்றி பெற்றது. மேலும் சாந்தி கிரந்தி மற்றும் கிந்திர ஜோகி படங்கள் தோல்வியைத் தழுவின. இவர் இந்த மூன்று படங்களிலும் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரனுடன் நடித்துள்ளார். இப்பொழுது இவர் ஒனிரின் அடுத்த திரைப்படமான "ஐ யம் மேகாவில்" நடித்துள்ளார். இதில் மனீஷா கொய்ராலா, ஜூஹி சாவ்லாவின் குழந்தைப் பருவ நண்பராக நடித்துள்ளார். அவரின் சில திரைப்படங்கள் வெவ்வேறு கதைச் சூழலை கொண்டு வெளிவந்தன. "ஐ யம் மேகா" அத்தகைய திரைப்படங்களில் ஓன்றாகும்.

தொலைக்காட்சி

தொகு

2000 ஆம் ஆண்டுகளின் போது சாவ்லா தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். குறிப்பாக விருது வழங்கும் விழாக்களான பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஜீ சினி விருதுகளில் பங்கேற்றிருந்தார். சாவ்லா ஜலக் திக்லா ஜா என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சரோஜ் கான் மற்றும் வைபவி மெர்சன்ட் ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றுள்ளார்.[25]

தயாரிப்பாளர்

தொகு

சாவ்லா பின்னாளில் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் சாருக்கான் மற்றும் இயக்குநர் ஆசிஸ் மிர்ஸாவுடன் இணைந்து டிரீம்ஸ் அன்லிமிடெட் எனும் தயாரிப்பு நிறுவத்தின் இணை உரிமையாளராகவும் இருந்தார்.[26] இந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் இரண்டுத் திரைப்படங்கள் ஃபீர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி மற்றும் அசோகா ஆகும். மூன்றாவது படமான சல்தே சல்தே இவர்களது கம்பெனிக்கு முதல் வெற்றிப் படமாகும்.[27]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜூஹி சாவ்லா தொழிலதிபர் ஜெய் மேத்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன;[28] அவருடைய மகள் 2001 ஆம் ஆண்டும்,[29] மகன் 2003 ஆம் ஆண்டும் பிறந்தனர்.[29] 1998 ஆம் ஆண்டு டுப்ளிக்கேட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அவருடைய அம்மா பிராகா எனும் இடத்தில் கார் விபத்தில் மரணமடைந்தார்.

ஜெய் மேத்தாவும், ஜூஹி சாவ்லாவும் சாருக்கானுடன் இணைந்து அவர்களது நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் [[மூலமாக இந்தியன் பிரிமியர் லீக்கின்|மூலமாக இந்தியன் பிரிமியர் லீக்கின்]] கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இணை உரிமையாளர்களாக இருந்தனர்.

திரைப்பட விவரம்

தொகு

நடித்தவை

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மற்ற குறிப்புகள்
1986 சுல்டனட் ஜரினா
1988 குயாமத் செ குயாமத் டக் ரஷ்மி பிலிம்பேர் லக்ஸ் புதுமுக விருதைவென்றார்
பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரேமலோகா சசிகலா கன்னட திரைப்படம்
பருவ ராகம் சசிகலா தமிழ்த் திரைப்படம்
1989 சாந்தினி தேவிகா
விக்கி தாதா ஷியாமலி தெலுங்குத் திரைப்படம்
லவ் லவ் லவ் ரீமா கோஸ்வமி
கூன்ச் சங்கீதா கலிகர்
1990 காபிலா கல்பனா அவஸ்தி
சுவர்க் ஜோதி
பிரதிபந்த் சாந்தி பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
தும் மேரே ஹோ பரோ
ஜஹ்ரீலே
சந்தார் துல்சி
சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரக்சா சர்மா
1991 சாந்தி கிரந்தி தெலுங்குத் திரைப்படம்
சாந்தி கிரந்தி கன்னடத் திரைப்படம்
நாட்டுக்கு ஒரு நல்லவன் தமிழ்த் திரைப்படம்
பினாம் பாட்ஷா ஜோதி
கர்ஷ் சுக்னா ஹை ராதா
பாபி
1992 போல் ராதா போல் ராதா பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ராதா க சங்கம்
ராஜூ பன் கயா ஜென்டில்மேன் ரேணு
மேரே சஜ்னா சாத் நிபனா
பிவஃபா சி வஃபா ரக்சார்
டவ்லட் கி ஜங்க் ஆஷா அகர்வால்
1993 லுட்டெர்
சத்ரன்ஜ்
இஜத் கி ரொதி
பெக்லா நசா
ததிபர் கேமியோ
ஆய்னா ரோமா
தர் கிரண் அவஸ்தி
ஹம் ஹைன் ரகி பியார் கி வைஜெயந்தி ஐயர் பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
கபி ஹன் கபி யா கௌரவத் தோற்றம்
1994 ஈனா மீனா டீக்கா மீனா
த ஜென்டில்மேன்
அந்தாஸ் சரஸ்வதி
அன்டாஸ் அப்னா அப்னா அவராகவே கௌரவத் தோற்றம்
கர் கி இஜாத் கீதா
பாக்கியவான் கீதா
பிரமாத்மா
சாஜன் க கர்
1995 ராம் ஜானே பேலா ஷிண்டே
கர்தவ்யா கஜல் சஹே
நஜயாஜ் இன்ஸ்பெக்டர் சந்தியா
ஆடங்க் ஹை ஆடங்க் நேஹா
1996 தலாசி
லோபெர் கிரண் மாதுர்
பண்திஷ் கந்தா
தரார் பிரியா பாட்யா பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
1997 யெஸ் பாஸ் சீமா கபூர் பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.'
இஷ்க் மது
மிஸ்டர். அண்ட் மிஸ்சஸ். கில்லாடி சாலு
திவானா மஸ்தானா டாக்டர் நேகா சர்மா
1998 சாத் ரங் கி சப்னே ஜலிமா
ஹரிகிருஷ்ணன்ஷ் மிரா வர்மா மலையாளத் திரைப்படம்
டூப்ளிகட் சோனியா கபூர்
ஜுத் போலி கவ்வா காட்டெ ஊர்மிளா அப்யன்கர்
1999 சஃபரி அஞ்சலி அகர்வால்
அர்ஜுன் பண்டிட் நீசா சோப்ரா
சாகித் உத்தம் சிங் நூர் ஜெகன்
2000 கேங் சனம்
கரூபர்: த பிசினஸ் ஆப் லவ் சீமா சக்ஷீனா
ஃபீர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி ரியா பானர்ஜி
2001 ஒன் 2 க 4 கீதா சவுத்ரி
ஏக் ரிஷ்டா பிரித்தி கபூர்
ஆம்தனி அட்தனி கர்சா ருபய்யா ஜும்ரி
2003 3 தீவாரின் சந்திரிக்கா
ஜன்கார் பீட்ஸ் சாந்தி
2004 தேஷ் ஹொயா பர்தேஷ் ஜசீ பஞ்சாபி திரைப்படம்
2005 மை பிரதர் நிகில் அனாமிகா
பஹேலி கஜ்ரோபய்
கமுஷ் : கவுப் கி கவுப்னக் ராட் டாக்டர் சாக்ஷி சாகர்
ஹோம் டெலிவரி: ஆப்கோ.... கர் தக் பர்வதி கக்கார்
7½ பீர் அஷ்மி கானட்ரா
தோஸ்தி: ஃப்ரெண்ட்ஸ் ஃபாரெவர் அதிதி
2006 பஸ் ஏக் பல் இரா மல்கோத்ரா
வரிஷ் ஷா-இஷ்க் த வாரிஷ் பஹாபாரி
2007 ஸலாம்-ஈ-இஷ்க் : எ ட்ரிபியூட் டூ லவ் சீமா
சுவாமி ராதா
ஓம் சாந்தி ஓம் அவராகவே கேமியோ
2008 பூத்நத் அஞ்சலி சர்மா
க்ரேசி 4 டாக்டர் சோனாலி
கிஸ்மத் கனெக்சன் ஹசீனா பனொ ஜான்
2009 லக் பை சான்ஸ் மிண்டி ரோலி

2009 அலாதின்

2009 மேகா

தயாரித்தவை

தொகு
 • 2000 - ஃபீர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி
 • 2001 - அசோகா
 • 2003 - சல்தே சல்தே

குறிப்புகள்

தொகு
 1. Taliculam, Sharmila (January 19, 2000). "'There have been many ups and downs'". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-29.
 2. "Not The End". The Tribune. May 10, 2001. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 3. Verma, Sukanya (March 11, 2004). "The real stars of Bollywood". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-29.
 4. 4.0 4.1 Doval, Nikita (March 21, 2005). "Juhi II". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2009-05-29. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 5. Verma, Sukanya (2008-03-19). "Readers pick: Bollywood's most under-rated". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.
 6. "imdb.com". Juhi Chawla's early life. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 7. "geocities.com". Miss Universe and Juhi Chawla. Archived from the original on 2 February 2002. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 8. "Filmfare Awards Listing" (PDF).
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-09-15. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 10. Derné, Steve (1995). Culture in Action: Family Life, Emotion, and Male Dominance in Banaras, India‏. SUNY Press‏. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0791424251.
 11. "Box office India". Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 12. "Filmfare Nominations 1992". Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 13. "Box Office Report". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 14. 14.0 14.1 "Box Office Report 1993". Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 15. "filmfareawards.indiatimes.com". Chawla wins Best Actress at Filmfare. Archived from the original on 9 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Text "web" ignored (help)
 16. "Box Office Report 1994". Archived from the original on 2013-01-07. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 17. "Filmfare nominations 1997". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 18. "Box Office 1997". boxofficeindia.com. Archived from the original on 8 April 2006. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 19. Srinivasan, V S (March 27, 1998). "The rise, fall and rise of Juhi Chawla". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
 20. "indiafm.com". Review of 3 Deewarein. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 21. "indiafm.com". Review of 7% Phere. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 22. "indiafm.com". Review of My Brother Nikhel. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 23. "indiafm.com". Review of SEI. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 24. "Juhi Chawla dons blonde look for 'Luck By Chance'". The Hindu. 2009-01-21. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2009-01-27. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 25. "Jhalak Dikhlaa Jaa Judges". Archived from the original on 2009-03-10. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
 26. "financialexpress.com". Juhi turns producer!. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 27. "boxofficeindia.com". First hit for Dreamz Unlimited. Archived from the original on 12 February 2006. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 28. "sawf.org". Juhi Chawla marries Jai Mehta. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 29. 29.0 29.1 "bollyvista.com". Juhi Chawla on her children. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 8 April 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூஹி_சாவ்லா&oldid=3792111" இலிருந்து மீள்விக்கப்பட்டது