ஜெகதேவி பாலமுருகன் கோயில்

ஜெகதேவி பாலமுருகன் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.

அருள்மிகு பாலமுருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:ஜெகதேவி, கிருஷ்ணகிரி வட்டம்
சட்டமன்றத் தொகுதி:பர்கூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:பாலமுருகன்
தாயார்:வள்ளிதெய்வாணை
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடிக்கிருத்திகை, 7 நாட்கள்

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. இக்கோயிலை அடைய ஏறக்குறைய 70 படிகள் ஏறிச் செல்லவேண்டும். கோயிலுக்கு வாகனங்களில் செல்ல அண்மையில் பாதைவசதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறையில் பாலமுருகன் உள்ளார். பாலமுருகனின் கருவறைக்கு இடதுபுறம் காசிவிசுவநாதர் தனிச்சந்நிதியிலும், வலப்புறம் விநாயகர் தனிச் சந்நிதியிலும் உள்ளனர். பிரகாரத்தில் வலது புறத்தில், நவகிரக உபசன்னதி உள்ளது. [1]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஆடி மாதம் ஆடிக்கிருத்திகை, முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

அமைவிடம் தொகு

இக்கோயில் கிருஷ்ணகிரி- சென்னை நெடுஞ்சாலையில் 20 கி.மீ தொலைவில் பருகூர் அமைந்துள்ளது. பருகூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் 0.5 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 82-83.