ஜெகன்னாத் (பி எஸ் எஸ் - 873) (நெல்)

ஜெகன்னாத் (பி எஸ் எஸ் - 873) (Jagannath (BSS-873) என்பது; 1975 - 1976 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வகையாகும்.[1] 140 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி 141 எனும் நெல் வகையிலிருந்து சடுதிமாற்றம் (Mutant) செய்து உருவாக்கப்பட்டதாகும்.[2] கடலோர பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெற்பயிர், 90 - 110 செ. மீ அரை குள்ளமாகவும், இதன் நெல் தானியங்கள் மிதமான அளவிலும் உள்ளது. ஒரு எக்டேருக்கு சுமார் 4000 - 5000 கிலோ (40-50 Q/ha) மகசூல் தரவல்ல இது, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பிராந்தியங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3]

ஜெகன்னாத் (பி எஸ் எஸ் - 873)
Jagannath (BSS-873)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டி 141 நெல் வகையிலிருந்து சடுதிமாற்றம்
வகை
புதிய நெல் வகை
காலம்
90 - 110 நாட்கள்
மகசூல்
4000
வெளியீடு
1976
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

சான்றுகள்

தொகு
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. International Atomic Energy Agency (IAEA)
  3. "Details of Rice Varieties : Page 1 - 25. Jagannath (BSS-873)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-02.