ஜெனிவா மாநாடு
ஜெனிவா மாநாடு (1932) என்பது படை கலன்கள் குறைப்பது தொடர்பான இரண்டாவது ஜெனீவா மாநாடு சுசர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் 1932- இல் நடைபெற்றது. 1927-ல் நடைபெற்ற ஜெனிவா கடற்படை மாநாட்டில் இருந்து இம்மாநாடு பெரிதும் மாறுபட்டது. இம்மாநாட்டில் படைகலன்கள் குறைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.[1][2][3]
இம்மாநாட்டில் 31 நாடுகள் பங்கேற்றன. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளும் கலந்து கொண்டு படை கலன் குறைப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி அளித்தன. ஆனால் 1933-ல் ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலரான போது ஜனிவா மாநாட்டு ஒப்பந்தங்களை மீறினார். சர்வதேச சங்கத்தில் இருந்தும் ஜெர்மனி விலகியது. 1932-ல் கிப்ஸன் லண்டன் மாநாட்டை துவக்குவதாக இருந்தார். ஆனால் அமெரிக்கா ஏற்கனவே படைகலன்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதால் இம்மாநாட்டில் ஆர்வம் காட்டவில்லை. கிப்ஸனின் கருத்துப்படி லண்டன் மாநாடு படைகலன் குறைப்பு நடவடிக்கை அல்ல. மாறாக நாடுகளுக்கிடையே இராணுவ சமநிலையை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டதாகும்.
செயலர் ஸ்டைம்சன் அமெரிக்கா மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியதின் முக்கியதுவத்தையும் ஜரோப்பாவில் அணு ஆயுத குறைப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உள்ள தார்மீக தன்மையை அமெரிக்காவிற்கு எடுத்து வடிவில் எழுதினார். ஜெர்மனின் காலனி ஆதிக்க கொள்கை மஞ்சூரிய சிக்கல் போன்றவற்றிற்கு படைகுறைப்பபு அவசியம் என்றும் கடலாதிக்க கொள்கை தூரகிழக்கு நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Philip John Noel-Baker, First World Disarmament Conference and Why It Failed (1979)
- ↑ Stevenson, David (2016-01-01). "Land Armaments in Europe, 1866–1914". Arms Races in International Politics. Oxford University Press. pp. 41–60. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780198735267.003.0003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-873526-7.
- ↑ Borg, M. T (1992-03-09). "Reducing Offensive Capabilities - the Attempt of 1932". Journal of Peace Research 29 (2): 145–160. doi:10.1177/0022343392029002003.