ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளி, துறையூர்

ஜெமீந்தார் மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியாகும். இப்பள்ளி 75 ஆண்டுகளுக்கும் மேலாக துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களின் கல்வி மேம்பாட்டிற்கு பங்களித்து வருகிறது.

வரலாறு தொகு

துறையூரிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் உயர்நிலைப் பள்ளியே இல்லாத சூழ்நிலையில் அனைத்து கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் வள்ளல் உயர்திரு P. முத்து வெங்கடாஜல துரை B.A.,B.L., அவர்களால் 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள், சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பள்ளி நிறுவப்பட்டது.

ஸ்தல அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடம் அன்றைய சென்னை மாகாண முதல்வர் காமராஜரால் 22-08-1958 அன்று திறக்கப்பட்டது.

1978 இல் அரசு மேல்நிலை கொண்டுவந்த அதே ஆண்டில் இவ்வூர் வட்டத்திலேயே முதல் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு மேல்நிலைப் பள்ளியாக மிளிரத் தொடங்கியது.

2003-2004 ஆம் கல்வியாண்டிலிருந்து ஆங்கிலவழிக் கல்வி சீரும் சிறப்புமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஆதாரங்கள் தொகு

[1]

  1. "பவள விழா மலர் 2015-2016". பார்க்கப்பட்ட நாள் 7 November 2021.