ஜெயந்தி நாகராஜன்
ஜெயந்தி நாகராஜன் (பிறந்த தேதி: மார்ச் 25 1954) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழில் முதுகலைப் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற இவர் தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் “வள்ளியப்பா படைப்புக்களில் வாழ்வியல் அறங்கள்” எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இவர் பல்வேறு அச்சிதழ்களில் கதை, கவிதை, நேர்காணல்கள் போன்றவற்றை எழுதியிருக்கிறார்.
ஜெயந்தி நாகராஜன் | |
---|---|
பிறப்பு | ஜெயந்தி மார்ச் 25 1954 [1] தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | மதுரை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | தமிழில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |
பணி | உதவிப் பேராசிரியர் (ஓய்வு) |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | எஸ்.நாகராஜன் |
பிள்ளைகள் | ஜனனி மகேஷ் (மகள்), ரோஹிணி தியாகராஜன் (மகள்) |
உறவினர்கள் | சகோதரர் -1, சகோதரிகள் -4 |
பிறப்பு
தொகுஇவர் சென்னை திருவல்லிக்கேணியில் சாரதா, சதாசிவன் ஆகியோருக்குப் பிறந்தார்.[1]
எழுதியுள்ள நூல்கள்
தொகுஇவர் கதை, கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு போன்ற தலைப்புகளில் சுமார் 40 நூல்களை எழுதியிருக்கிறார்.
பாராட்டுகள்
தொகுஇவர் தன்னுடைய படைப்புகளுக்காக வரலாற்று எழுத்துச் செம்மல்,எழுத்துச்சுடர் என்கிற சிறப்புப்பட்டங்களையும் பெற்றுள்ளார்.
விருதுகள்
தொகு- வள்ளியப்பா இலக்கிய விருது
- கவிதை உறவு விருது,
- டாக்டர் மு.வ. நினைவு விருது
- இலக்கிய வேந்தன் விருது
- நல்லாசிரியர் விருது- சென்னை கிழக்கு தாம்பரம் அரிமா சங்கம்
போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.[1]
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - முனைவர் ஜெயந்தி நாகராஜன்". www.tamilonline.com.