ஜெயலட்சுமி சீதாபுரா
ஜெயலட்சுமி சீதாபுரா (ஆங்கிலம்: Jayalakshmi Seethapura; கன்னடம்: ಡಾ. ಜಯಲಕ್ಷ್ಮಿ ಸೀತಾಪುರ) என்பவர் கன்னட மொழியில் எழுதும் நவீன இந்தியாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறவியலாளர்களில் ஒருவர்.[1] சீதாபுரா மைசூர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயலட்சுமி நூற்றுக்கணக்கான மாநில மற்றும் தேசிய அளவிலான கலாச்சாரப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றுள்ளார். நாட்டுப்புறவியல் பற்றிய இவரது புத்தகங்கள் கர்நாடக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தி. ஜெயலட்சுமி | |
---|---|
ஜெயலட்சுமி சீதாபுரா மைசூர் பல்கலைக்கழகத்தில் | |
புனைபெயர் | ஜெயலட்சுமி சீதாபுரா |
வகை | நாட்டுப்புற இசை, நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாச்சார ஆய்வுகள் |
ஜெயலட்சுமி நாட்டுப்புறவியல் குறித்து 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க சில: "நம்ம சுத்தின ஜனபத கதைன கீதேகள்" ('கர்நாடக ஜனபதா மற்றும் யக்ஷகானா அகாதமி வெளியீடு),[2] "ஹக்கி ஹரியாவே கிடடகா", "ஜானபத ஹட்டி", "கல்யாணவெண்ணி ஜனரெல்லா" (கன்னட இலக்கிய மன்றத்தால் வெளியிடப்பட்டது).[3] கர்நாடகாவின் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சீதாபுரா 2016-ல் கர்நாடக ஜனபதா அகாதமி விருதையும் பெற்றார்.[4]
புத்தகங்கள்
தொகுஜெயலட்சுமி 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவை பெரும்பாலும் நாட்டுப்புறவியல் மற்றும் கலாச்சார ஆய்வுகள் தொடர்பானது. இவற்றில் சில:
- ஹக்கி ஹார்யவே கிடடகா [5]
- கல்யாணவெண்ணி ஜனரெல்லா
- ஜானபதா ஹட்டி
- நம்ம சுட்டின ஜனபத கதனகீதேகள்
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Pandavapura Kannada Sahitya Sammelana". www.prajavani. 23 Jun 2017.
- ↑ "Sapnaonline:Search Page". www.sapnaonline.com.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Jayalakshmi Seethapura". www.marymartin.com. Archived from the original on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
- ↑ "Janapada Academy Awards to be given away tomorrow". 9 January 2016 – via www.thehindu.com.
- ↑ "RIEMysore catalogue". RIEMysore.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Janapada Academy Awards to be given away tomorrow". 9 January 2016 – via www.thehindu.com.
- ↑ "Janapada Awards announced". www.kannadaprabha.com.