ஜெரமி பெந்தாம்
ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பெந்தம் (Jeremy Bentham: 15 பிப்ரவரி 1748 – 6 ஜூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்,[1][2] சமூக சீர்திருத்தவாதி. இவருடைய பயன் கருதுக் கோட்பாடு மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] இவர் மேலும் 'அரசியல் தந்திரங்கள் பற்றிய கட்டுரை', 'பன்னாட்டுச் சட்டத்தின் கொள்கைகள்', 'அரசியலமைப்புத் தொகுப்பு', 'இங்கிலாந்தின் தேவாலயம்' ஆகிய புகழ்பெற்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
ஜெரமி பெந்தாம் | |
---|---|
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | 15 பெப்ரவரி 1748
இறப்பு | 6 சூன் 1832 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 84)
காலம் | 18 ஆம் நூற்றாண்டு 19 ஆம் நூற்றாண்டு |
பள்ளி | பயன் கருதுக் கோட்பாடு, ஆள்வோன் சட்டம் வகுக்கும் நெறி, தாராண்மையியம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் மெய்யியல், சட்ட மெய்யியல், நன்னெறி, பொருளியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | பெருமமகிழ்ச்சிக் கோட்பாடு |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
விலங்குரிமை
தொகுவிலங்குரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் தனது காலகட்டத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஜெரமி பெந்தாம். தனது ஆன் இன்ட்ரொடக்ஷன் டு தி பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல்ஸ் அண்டு லெஜிஸ்லேஷன் என்ற படைப்பில் பெந்தாம் இவ்வாறு கூறுகிறார்:[4]:309n
“ | அவைகளால் [விலங்குகளால்] சிந்திக்க முடியுமா? என்பதோ அவைகளால் பேச முடியுமா? என்பதோ இங்கு கேள்வி அல்ல, மாறாக அவைகளால் வலிக்கும் துன்பத்திற்கும் ஆட்பட முடியுமா? என்பதே கேள்வி. | ” |
மேற்கோளும் குறிப்புகளும்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜெரமி பெந்தாம்
- ↑ Sunstein, Cass R. "Introduction: What are Animal Rights?", in Sunstein, Cass R. and Nussbaum, Martha (eds.). Animal rights. Oxford University Press, 2005, pp. 3–4.
- Francione, Gary. Animals—Property or Persons", in Sunstein and Nussbaum 2005, p. 139, footnote 78.
- Gruen, Lori. "The Moral Status of Animals", Stanford Encyclopedia of Philosophy, 1 July 2003.
- Benthall, Jonathan."Animal liberation and rights", Anthropology Today, volume 23, issue 2, April 2007, p. 1.
- ↑ Bentham, Jeremy. "Offences Against One's Self", first published in Journal of Homosexuality, v.3:4(1978), p.389-405; continued in v.4:1(1978).
- Also see Boralevi, Lea Campos. Bentham and the Oppressed. Walter de Gruyter, 1984, p. 37.
- ↑ Bentham, Jeremy (1776). A Fragment on Government. London., Preface (2nd para.).
- ↑ Bentham, Jeremy. 1780. "Of the Limits of the Penal Branch of Jurisprudence." pp. 307–335 in An Introduction to the Principles of Morals and Legislation. London: T. Payne and Sons.