ஜெரெமி சேக்கர்லி

ஆங்கிலேய வானியலாளர்

ஜெரெமி (ஜெர்மையா) சேக்கர்லி (Jeremy [Jeremiah] Shakerley) (நவம்பர் 1626 – அண். 1653) கணியவியல்(சோதிடம்) மர்புக் குடும்பத்தில் தோன்றிய ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். ஆனால், இவர் நோக்கீட்டு அணுகுமுறையல்ப் பின்பற்றியதால் தன் சமகாலப் பணிகளை அறிவியல் மனப்பான்மையோடு திறனாய்வுக்கு உட்படுத்தினார்.

இவர் மேற்கு யார்க்சயரில் காலிபாக்சு எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் வில்லியம் சேக்கர்லி; தாயார்யூடித் பிரிகே ஆவார். இவர் இலவசப் பள்ளியில் அயர்லாந்தில்படித்தார். அங்கு கலவரம் வெடிக்கவே வீடு திரும்பியுள்ளார். இவர் 1647 இல் இருந்து கணிதவியல் படிப்பதில் ஆழ்ந்து கவனம் செலுத்தியுள்ளார். மேலும், வில்லியம் இலில்லி எனும் கணிய வல்லுனருடன் தொடர்பிலும் இருந்துள்ளார். இவர் வானியல் நடைமுறைவழி ஒளிமறைப்பை முன்கணிப்பதையும் கணியம் சொல்லுவதை மேம்படுத்தவும் முடியும் என நம்பியுள்ளார். இவர் ஜான் சுட்டீவன்சன் கீழ் கெப்ளர் பட்டியல்களைப் பயன்படுத்திக் கணக்கீடுகளைச் செய்து பணிபுரிந்தார். மேலும், சிலகாலம் இவர் கிறித்தொபர் கேரி எனும் புரவலரின் கீழும் பணிபுரிந்துள்ளார். இவர் In 1649 இல் வின்சென்ட் விங்கின் பணியைத் திறனாய்வு செய்யத் தொடங்கி, யுரேனியா பிராக்ட்டிக்கா நூல் பகுப்பாய்வு எனும் நூலை வெளியிட்டார். அதிலுள்ள வின்சென்ட் விங்கும் வில்லியம் இலேபவுர்னேவும் இழைத்த பிழைகளையும் பொருத்தமற்றவற்றையும் வெளிப்படுத்தினார். இவர் ஜெரெமையா அராக்சின் ஆய்வை ஆழமாகப் படித்து நிலாவின் இயக்கவியல் பற்றிய சிறந்த புரிதலுக்கு வந்துள்ளார்.[1]

இவரது முன்கணிப்புகள் 1653 இல் இராபெர்ட்டாலும் வில்லியம் இலேபவுர்னேவாலும் டேபுலே பிரித்தானிக்கே, அதாவது, பிரித்தானியப் பட்டியல்கள் எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இவர் 1651 இல் நிகழப் போவதாக க்ணிக்கப்பட்ட, அறிவன்(புதன்) கோளின் கடப்பை நோக்கீடுகள் செய்ய, இந்தியாவுக்குச் சென்றார். இந்தியாவில் இருந்தபோது இவர் சூரத்தின் அகலாங்கை "21 பாகைகளும் கூட, 10' இல் இருந்து 15 ' வடக்கிலும்" இருந்ததாக இலண்டனில் இருந்த என்றி ஆசுபோர்னுக்கு எழுதி அறிவித்துள்ளார் . இவர் இதியக் கணியர்கள் நிலா ஒளிமறைப்புகளைப் பிழையின்றிக் கணித்தலை கவனித்தார். எனவே அவர்களின் முறைகளை ஆராயலானார். பிறகு இவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, இவர் இந்தியாவில் இறந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Chapman, Allan (2005), "To the Heavens in Rural Lancashire: Jeremiah Horrocks and His Circle, and the Foundation of British Astronomical Research", Participating in the Knowledge Society (in ஆங்கிலம்), London: Palgrave Macmillan UK, pp. 23–35, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/9780230523043_2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-349-51996-5, பார்க்கப்பட்ட நாள் 2020-09-20
  2. Chapman, A. (1985). "Jeremy Shakerley (1626-1655?) Astronomy, astrology and patronage in Civil War Lancashire". Transactions of the Historical Society of Lancashire and Cheshire 135: 1–14. https://www.hslc.org.uk/wp-content/uploads/2017/05/135-2-Chapman.pdf. 
  3. Willmoth, Frances (2004). "Oxford Dictionary of National Biograph". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/25197.  (Subscription or UK public library membership required.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரெமி_சேக்கர்லி&oldid=3955257" இலிருந்து மீள்விக்கப்பட்டது