ஜெ. பாலசுப்பிரமணியம்

ஜெ. பாலசுப்பிரமணியம், பேராசிரியர், சமூக அறிவியல் ஆய்வாளர். தலித் இதழியல் வரலாறு, தலித் இயக்க வரலாறு, உள்ளூர் வரலாறு போன்ற புலங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பணியாற்றி வருகிறார். மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

நூல்கள்

தொகு
  • சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள் 1869-1943, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2017.
  • பூலோகவியாசன் தலித் இதழ்த் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2017.
  • புதைந்த பாதை, தென் கரிசல் பதிப்பகம், திருப்பணிகரிசல்குளம், 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._பாலசுப்பிரமணியம்&oldid=3036797" இலிருந்து மீள்விக்கப்பட்டது