ஜேஎன் ஜெயஸ்ரீ
ஜே.என்.ஜெயஸ்ரீ இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஊழலை அம்பலப்படுத்துபவர் ஆவார், அவரது கணவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான,எம்.என்.விஜய் குமாரும் அரசுமட்டத்தில் நிலவும் ஊழல்களை அம்பலப்படுத்துபவரே. அதன் பொருட்டு ஏழு மாதங்களில் ஒன்பது இடமாறுதல்களை சந்தித்த இவர்களது குடும்பம், 2007 ம் ஆண்டில் இருந்து பல்வேறு தொடர் நெருக்கடிகளை சந்தித்தது. ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்தபோதிலும், தனது கணவரை பாதுகாக்கும் பொருட்டு ஒரு விக்கியை உருவாக்கியுள்ளார். [1] ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர அவரது இணையதளம் மிகவும் உதவும் என்ற நம்பிக்கை கொண்ட இவருக்கு, சத்யேந்திர துபே (தங்க நாற்கர திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பியவர்) மற்றும் மஞ்சுநாத் சண்முகம் (பெட்ரோல் கலப்பட வழக்கில் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பியவர்) ஆகியோரின் விபத்தினால் ஏற்பட்ட மரணத்தை மனதில் கொண்டு, இதே போன்ற ஊழலை அம்பலப்படுத்துபவரான தனது கணவருக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுவிட கூடாதென்ற முன்னெச்சரிக்கையில் இந்த இணையதளத்தை தொடங்கினார்.ஊழல்வாதிகளை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அம்பலப்படுத்த முடிவு செய்து, அதன்படி பல்வேறு தகவல் அறியும் மனுக்களை கர்நாடக அரசின் பல்வேறு துறைகளுக்கும் அனுப்பி பதில்களை பெற்று வந்துள்ளார்.
2007-ம் ஆண்டில் கர்நாடக அரசு அதன், ஊழல் எதிர்ப்பு உயர்மட்டக் குழுவைக் கலைத்தபின்பே விஜயகுமாரும் அவரது மனைவி ஜெயஸ்ரீயும் இத்தகைய ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் முன்பாக கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளதாக கருதுகிறார்கள். .
விஜயகுமார் கடைசியாக அலுவலக முதன்மைச் செயலர், (துறை விசாரணை கையேடு) மற்றும் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இது விஸ்வேஸ்வரய்யா கோபுரத்தின் 21வது மாடியில் இருந்தது. ஆனால் இவர்களது இத்தகைய செயல்களால், கட்டாய ஓய்வு அளித்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.