ஜேகர் விளக்கப்படம்

ஜேகர் விளக்கப்படம் (Jaeger chart) என்பது கிட்டப் பார்வையினைக் கூர்மையைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கண் விளக்கப்படமாகும். இது ஒரு அட்டையாகும். இதில் உரையின் பத்திகள் அச்சிடப்பட்டிருக்கும். உரையின் அளவுகள் 0.7 மிமீ முதல் 2.5 மிமீ வரை அதிகரித்த நிலையிலிருக்கும்.[1] இந்த அட்டையை ஒரு பார்வைக் குறைபாடு உடையவர் கண்ணிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வைத்துப் பிடித்துக்கொண்டு படிக்கப்படும் அளவினைப் பொறுத்துச் சோதிக்கப்படுகிறது. சோதிக்கப்படும் ஒருவர் படிக்கக்கூடிய மிக சிறிய அச்சு அவர்களின் காட்சி கூர்மையை தீர்மானிக்கிறது.[2]அசல் 1867 விளக்கப்படம் ஏழு பத்திகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏழு புள்ளி அளவைக் கொண்ட ஓர் உரையைக் கொண்டிருந்தது.[3]

ஜேகர் அட்டைகள் தரப்படுத்தப்படவில்லை. மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள வெவ்வேறு ஜேகர் அட்டைகளில் சோதனை எழுத்துக்களின் உண்மையான அளவின் மாறுபாடு மிக அதிகமாக உள்ளது.[4] எனவே, வெவ்வேறு ஜேகர் அட்டைகளுடன் சோதனை முடிவுகள் ஒப்பிடத்தக்கவை அல்ல.

பொதுவாக, தூர பார்வை கூர்மை இசுனெல்லன் விளக்கப்படத்தைப் பயன்படுத்திச் சோதிக்கப்படுகிறது. இது பெரிய எழுத்துடன் பொருத்தப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Blesi, Michelle; Wise, Barbara; Kelley-Arney, Cathy (2011). Medical Assisting Administrative and Clinical Competencies. Cengage Learning. pp. 888–890. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1133706960.
  2. G.K. & Pal; Pal; Pravati (1 February 2006). Textbook Of Practical Physiology (2nd ed.). Orient Blackswan. pp. 328–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2904-5.
  3. Khurana (2008). Theory and Practice of Optics and Refraction. Elsevier India. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131211328.
  4. (May 2007) "Can Jaeger Numbers be Standardized? (Poster 3563)". {{{booktitle}}}.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேகர்_விளக்கப்படம்&oldid=4130624" இலிருந்து மீள்விக்கப்பட்டது