ஜேக்கே குஸ்தோவ்
ஜேக்கே இவ் குஸ்மோவ் (Jacques-Yves Cousteau, 11 ஜூன் 1910 – 25 ஜூன் 1997) [1] என்பவர் ஒரு பிரெஞ்சு கடற்படை அதிகாரி, ஆய்வாளர், பாதுகாவலர், திரைப்படத் தயாரிப்பாளர், புதுமைப்பித்தர், அறிவியலாளர், ஒளிப்படக் கலைஞர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் நீர் நுரையீரலை (நீரில் சுவாசிக்கப்பயன்படும் கருவி) இன்னொருவருடன இணைந்து உருவாக்கினார். கடல் பாதுகாப்பிற்கு ஒரு முன்னோடியாக இருந்தார். மேலும் பிரான்சிய அகாதமியின் உறுப்பினராக இருந்தார்.
ஜேக்கே குஸ்தோவ் | |
---|---|
1972 இல் குஸ்தோவ் | |
பிறப்பு | ஜேக்கே இவ் குஸ்மோவ் 11 சூன் 1910 செயிண்ட்-ஆண்ட்ரே-டி-கப்சாக், பிரான்சு |
இறப்பு | 25 சூன் 1997 பாரிஸ், பிரான்சு | (அகவை 87)
தேசியம் | பிரஞ்சியர் |
பணி | கடலியல் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | Pierre-Antoine Cousteau (சகோதரர்) |
குஸ்மோவ் தனது கடல் நீரடி ஆராய்ச்சி குறித்து தொடர்ச்சியாக பத்தகங்கள் எழுதினார். அந்தவரிசையில் மிகவும் வெற்றிகரமான அவரது முதல் புத்தகமான தி சைலண்ட் வேர்ல்ட்: அ ஸ்டோரி ஆஃப் அண்டர்சீ டிஸ்கவரி அண்ட் அட்வென்ச்சர் 1953 இல் வெளியிடப்பட்டது. குஸ்மோவ் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார், குறிப்பாக இவரது முதல் புத்தகத்தில் உள்ளவற்றைத் தழுவி தி சைலண்ட் வேர்ல்ட் என்ற ஆவணப்படத்தை எடுத்தார். இது 1956 கேன்ஸ் திரைப்பட விழாவின் உயர் விருதான பாம் டி'ஓரை வென்றது. 2004 ஆம் ஆண்டில் பாரன்ஹீட் 9/11 ஆவணப்படத்துக்காக மைக்கேல் மூர் பாம் டி'ஆர் விருதை வெல்லும் வரை, ஆவணப்படத்திற்காக அந்த விருதை வென்ற ஒரே நபராக இவர் இருந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Cousteau Society". Archived from the original on 25 January 2009. பார்க்கப்பட்ட நாள் 12 September 2013.