ஜேம்சு கார்ப்பென்ட்டர்

பிரித்தானிய வானியலாளர்

சேமுசு கார்ப்பென்றர் (James Carpenter) (1840–1899) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் கிரீன்விச்சில் இருந்த அரசு வான்காணகத்தில் பணிபுரிந்தார்.

கோளாகக் கருதிவந்த நிலா உலகமும் துணைக்கோளும்

இவர் 1860 களில் கிரீன்விச் வான்காணகத்தில் அரசு வானியலாளரான சார்ச்சு ஏரி அவர்கலின் வழிகாட்டுதலின்கீழ் முதன்முதலாக விண்மீன்களின் மின்காந்தக் கதிர்நிரல்களைச் சார்ந்த நோக்கீடுகளை எடுத்தார் , .[1]இவர் 1861, 1862 களில் காரிக்கோளின் வலயங்களின் அடிப்பகுதி இருட்டைக் கண்டறிந்த வானியலாளர்களில் ஒருவராவார். மற்ற இருவர் வில்லியம்விரே, ஆட்டோ சுத்ரூவே ஆகியவர்கள் ஆவர்.[2]

கோளாகக் கருதிவந்த நிலா உலகமும் துணைக்கோளும் எனும் நிலாவை பற்றிய நூலை 1871 இல் பொறிஞர் சேமுசு கால் நாசுமித்தும் சேமுசு கார்ப்பெண்டரும் எழுதினர்.[3]இந்த நூல்களில் பல கோணங்களில் ஒளியூட்டி எடுக்கப்பட்ட நிலா மேற்பரப்பை உருவகிக்கும் காரையாலான படிமங்களின் ஒளிப்படங்கள் தரப்பட்டுள்ளன. அவை அக்காலத்தில் தொலைநோக்கி வழி எடுக்கப்பட்ட நிலாத்தரைப் படிமங்களை விட உண்மையான படிமங்களாக விளங்கின.[4] இந்நூலின் ஆசிரியர்கள் குழிப்பள்ளங்களுக்கானஎரிமலைசார் தோற்றத்தை முன்மொழிந்தவர்கள். இக்கோட்பாடு பின்னர் பொய்ப்பிக்கப்பட்டது.[5]

நிலாவின் கார்ப்பென்ட்டர் குழிப்பள்ளம் இவரது பெயராலும் எடுவின் பிரான்சிசு கார்ப்பென்ட்டர் நினைவாகவும் வழங்கப்படுகிறது[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Assistant grades". The Royal Observatory Greenwich.
  2. Richard Anthony Proctor (1865). Saturn and Its System. Longman, Roberts, & Green. pp. 65–67.
  3. James Nasmyth, James Carpenter (1885). The Moon: Considered as a Planet, a World, and a Satellite. Scribner & Welford. The Moon: Considered as a Planet, a World, and a Satellite.
  4. 4.0 4.1 "Carpenter crater". ESA. 2006.
  5. Cesare Barbieri, Francesca Rampazzi (2001). Earth-Moon Relationships. Springer. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780792370895.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_கார்ப்பென்ட்டர்&oldid=3955128" இலிருந்து மீள்விக்கப்பட்டது