ஜேம்சு பவுண்டு
ஜேம்சு பவுண்டு (James Pound) (1669–1724) ஓர் ஆங்கிலேயப் பாதிரியாரும் வானியலாளரும் ஆவார்.
வாழ்க்கை
தொகுஇவர் வில்ட்டுசயரில் ஜான் பவுண்டுக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் வில்ட்டுசயரில் இருந்த கான்னிங்சு பேராயத்தின் பாதிரியார் ஆவார். இவர் ஆக்சுபோர்டு புனித மேரி முற்றத்தில் பயின்றார்; இவர் 1687, மார்ச்சு 16 இல் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கார்ட்டு முற்றத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் 1694, பிப்ரவரி, 27 இல் பெற்றார்; பின்னர், கிளசுசு செசுட்டர் முற்றத்தில் சேர்ந்து தன் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்; இவர் 1697, அக்தோபர், 21 இல் மருத்துவ இளவல் எனும் மருத்துவப் பட்டயத்தையும் பெற்றார்.
இவர் கிழக்கிந்தியக் குழும ஆணையைப் பெற்று, கிழக்கிந்தியக் குழுமப் பணியில் சேர்ந்தார். பிறகு, 1699 இல் புனித ஜார்ஜ் கோட்டை வணிகருக்கான மதக்குருவாக சென்னைக்கு (அன்றைய மதராசுப் பட்டினத்துக்கு )வந்துள்ளார். அப்போது மேக்காங்கு ஆற்று முகப்பில் உள்ள புலோ காண்டோர் தீவு(இன்று கோன் சோன் தீவு) பிரித்தானியக் குடியிருப்புக்குச் சென்றார். புலோ காண்டோரின் குழுமக் களப்படையணிகள் 1705, மார்ச்சு, 3 ஆம் நாளன்று காலையில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இக்கலகத்தில் இருந்து 11 ஆங்கிலேயர் மட்டும் தப்பித்து மலாக்கா சென்று, பிறகு, இறுதியில் டச்சு கிழக்கிந்தியக் குழுமம் இருந்த பட்டாவியாவுக்குச் சென்றுள்ளனர். இந்த அகதிகளில் ஒருவராக பவுண்டும் இருந்தார். என்றாலும், இவர் திரட்டிய பணமும் ஆய்வுத் தாள்களும் அழிக்கப்பட்டன.
ஓராண்டுக்குப் பிறகு, 1707 ஜூலையில் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தார். முதலாம் கோமான் சர் இரிச்சர்டு தைல்னே சைல்டு, எசெக்சில் உள்ள வான்சுட்டீடுக்கு பவுண்டைக் காப்பாளர் ஆக்கினார். ஜான் பிளேம்சுட்டீடின் இறப்புக்குப் பிறகு இவர் முதலாம் மாக்கிலெசுபீல்டு கோமான ஆகிய தாமசு பார்க்கரின் செல்வாக்கால் 1720, ஜனவரியில் அரசு வானியலாளர் ஆக பணியமர்ந்தார்; சுரேவில் உள்ள பர்சுட்டோவிலும் குடியமர்ந்தார்.இவர் 1699, நவம்பர், 30 இல். அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். என்றாலும், இந்தத் தேர்வு 1713, ஜூலை வரை ஒத்திவைக்கப்பட்டது. எடுமாண்டு ஆல்லே அரசு கழகத்துக்குப் பவுண்டு 1715, மே, 3 இல் பதிவுசெய்த ஒளிமறைப்பில் அதன் கலைகளைத்(கட்டங்களைத்) துல்லியமாக தீர்மானித்த பாங்கை அறிவித்தார். இவர் 1715, ஜூலை, 30 இல் பதினைந்தடி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, வியாழன் அருகில் இருந்த விண்மீனை வியாழன் மறைத்ததையும் அதே ஆண்டுஅக்தோபர் 30 இல் நிலா ஒளிமறைப்பையும் நோக்கிடு செய்துள்ளார். தொடர்ந்து1716 இலும் 1717 இலும் பல கோள்களின் நோக்கீடுகளை செய்துள்ளார்.
அரசு வானியல் கழகம் 1717 இல் கிறித்தியான் ஐகென்சின் தொலைநோக்கியின் 123 அடி குவியத் தொலைவு கொண்ட பொருள்வில்லையைப் பவுண்டுக்குக் கடனாக அளித்தது. இதை இவர் மேப்போலில் உள்ள வான்சுட்டீடு இல்லத்தில் நிறுவினார். இது பின்னர், சர் ஐசக் நியூட்டனுக்காக வாங்கப்பட்டது. இந்தக் கருவி மாற்றீடு பற்றி ஜோசப் கிராசுத்துவைட் எதிர்ப்புக் கருத்துரைத்துள்ளார். காரிக்கோளின் நிலாக்களில் பவுண்டு எடுத்த நோக்கிடுகள், அவற்றின் இயக்கங்களைத் திருத்த ஆல்லேவுக்கு உதவியுள்ளது.பிரின்சிபியாவின் மூன்றாம் பதிப்பில், பவுண்டின் வியாழன் வட்டு, காரிக்கோள் வட்டு, வலயங்கள், அவற்றின் நிலாக்களின் நீட்டம் ஆகியவற்றைச் சார்ந்த நுண்ணளவுகளை நியூட்டன் பயன்படுத்தியுள்ளார், நியூட்டன் வால்வெள்லி 1680 சார்ந்த இருப்புகளைப் பற்றிய தரவுகளையும் பவுண்டிடம் இருந்து பெர்றுள்ளார். இலாப்லாசும் பவுண்டின் வியாழன் நிலாக்கள் சார்ந்த நோக்கிடுகளை வியாழனின் பொருண்மையைக் கண்டுபிடிக்க, வாங்கியுள்ளார். பவுண்டும் 1719 இல் வியாழன் கோளுக்கான தரவுகளைப் பட்டியல்களாகத் தொகுத்து வெளியிட்டார். இதில் இவர் ஒளிப் பரவலுக்கான சமன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பவுண்டு தனது தங்கையின் மகன் ஜேம்சு பிராட்லேவுக்குப் பயிற்சியளித்தார். இருவரும் இணைந்து பலநோக்கீடுகளைச் செய்துள்ளனர். இதில் 1719 செவ்வாய் எதிர்வும் 1723, அக்தோபர், 23 புதன் கோளின் கடப்பும் உள்ளடங்கும். இவர்கள் முதன்முதலாக 1718 இல் இரட்டை விண்மீன் ஒன்றின் உறுப்படிகளான ஒய் வர்ஜினிசுவை அளந்தனர். இது உடுக்கண இடமாறு தோற்றப் பிழையை கணக்கிட்டு, தீர்மானிக்க வழிவகுத்தது.
இவர் கியூ அறண்மனையில் சாமுவேல் மாலினியூக்சை அடிக்கடி சந்தித்துவந்தார். இவரை 1723 ஜூலையில், அரசு கழகம் ஜான் ஏடுலேவின் ஒளித்தெறிப்புத் தொலைநோக்கியைச் சோதிக்க, பணித்தது. இவர் அந்தத் தொலைநோகி திறம்பட வேலை செய்வதாக அறிக்கை அளித்தார். இவர் 1724, நவம்பர், 16 இல் வான்சுட்டீடில் 55 ஆம் அகவையில் இறந்தார்.
குடும்பம்
தொகுபவுண்டு, எடுவார்டு பார்மரின் விதவையான சாராவை, 1710, பிப்ரவரி, 14 இல் திருமணம் செய்துகொண்டார். சாரா 1715, ஜூனில் இறந்துவிட்டுள்ளார். இரண்டாவதாக,, 1722 , அக்தோபரில் மத்தேயு வைமான்சோல்டின் தங்கையான எலிசபெத்தை மணந்துகொண்டார். வைமான்சோல்டு வான்சுட்டீடு தோட்ட உரிமையாளர்; இவர் தென்கடல் வணிகத்தில் முன்கணிப்பில் வல்லவராக இருந்தார்.எலிசபெத்து தன் கணவர் இறந்தபோது 10,000 பவுண்டுகள் பணவளம் வாய்ந்தவராக் விளங்கினார். இவர் தன் கணவர் இறந்த பிறகு, ஆக்சுபோர்டில் பிராடுலேவுடன் வாழ்ந்தார். இவர்1740, செப்டம்பர், 10 இல் இறந்துள்ளார்; இவர் வான்சுட்டீடு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பவுண்டு 1713, செப்டம்பர் 16 இல் சாரா பெற்றெடுத்த இவரது மகளும் 1747, அக்தோபர் 19 இல் திருமணம் கழியாமலே இறந்துள்ளார் .
மேற்கோள்கள்
தொகு- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: "Pound, James". Dictionary of National Biography. (1885–1900). London: Smith, Elder & Co.