ஜேம்ஸ் சாமுவேல் வின்சென்ட்

ஜேம்ஸ் சாமுவேல் வின்சென்ட் (Sam Vincent) (பிறப்பு: மே 18, 1963) ஒரு அமெரிக்க ஓய்வு பெற்ற தொழில்முறை கூடைப்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.[1]

வின்சென்ட் 1981 ஆம் ஆண்டில் மிச்சிகன் மாநில "மிஸ்டர் கூடைப்பந்து" விருதை வென்றார். முதன்முதலாக இந்த விருது வழங்கப்பட்ட போது இவர் இந்த விருதினைப் பெற்றவராவார். லான்சிங்கின் ஈஸ்டெர்ன் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், ஒரு ஆட்டத்தில் மூத்தோர் பிரிவில் விளையாடும் பேர் 61 புள்ளிகளைப் பெற்றார். எவரெட் உயர்நிலைப் பள்ளியில் மேஜிக் ஜான்சனால் பதிவு செய்யப்பட்டிருந்த முந்தைய சாதனையான 54 புள்ளிகள் என்ற இலக்கை உடைத்தது.

6' 2 " உயரம் கொண்ட இவர் மைதானத்தின் பாய்ண்ட் கார்ட் என்ற நிலையில் விளையாடும் வீரரானார். தனது மூத்த சகோதரர் ஜே வின்சென்ட்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பயின்றார். மற்றும் 1985 ஆம் ஆண்டில் ஸ்போர்டிங் நியூஸ் என்ற அமெரிக்க விளையாட்டுச் செய்திகளுக்கான பத்திரிக்கையானயால் ஆல்-அமெரிக்கா என்ற கற்பனையான சிறந்த வீரர்களைக் கொண்ட அணியில் இடம் பெறும் தகுதியைப் பெற்றவராக அடையாளம் காணப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, போஸ்டன் செல்டிக்ஸ் 1985 ஆம் ஆண்டு NBA வரைவின் இருபதாவது தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் செல்டிக்ஸிற்காக இரண்டு பருவங்களில் விளையாடினார். சியாட்டில் சூப்பர்சோனிக்ஸில் சேருவதற்கு முன்பு, 1986 ஆம் ஆண்டில் என்பிஏ வாகையாளர் போட்டி வளையத்தை ஒரு காத்திருப்பு (அ) பதிலி வீரராக வென்றார். அவர் செடேல் திரெயேட்டிற்கா சிகாகோ புல்ஸ் நிறுவனத்திடம் தன்னை வர்த்தகம் செய்தார். புல்ஸ் உடனான நிலையான ஒன்றரை ஆண்டு கால விளையாட்டிற்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு என்பிஏ விரிவாக்க வரைவில் ஆர்லாண்டோ மேஜிக்கால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1992 ஆம் ஆண்டில் மேஜிக் உடன் விளையாடி, தனது என்பிஏ வாழ்க்கையை முடித்தார். அவர் என்பிஏ வில் தனது ஏழு ஆண்டு காலப்பகுதியில் 3,106 புள்ளிகளையும், 1,543 புள்ளி பெறுதலுக்கான உதவிகளையும் வென்றார்.

ஓய்வு பெற்ற சிறிது நேரத்திலேயே, வின்சென்ட் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் டிஸ்னியின் வைட் வேர்ல்ட் ஆப் ஸ்போர்ட்ஸில் பணியாற்றினார். 1990 களின் பிற்பகுதியில், அவர் தென்னாப்பிரிக்காவில் கூடைப்பந்தாட்டத்தை பயிற்றுவித்தார். பின்னர் இவர் கிரீஸ், நெதர்லாந்து, நைஜீரியா மற்றும் என்.பி.டி.எல் . ஆகிய அணிகளைப் பயிற்றுவித்தார். 2004 கோடைகால ஒலிம்பிக்கில், அவர் நைஜீரிய மகளிர் கூடைப்பந்து அணியை தென் கொரியாவுக்கு எதிராக 68-64 என்ற கணக்கில் வெல்வதற்கு வழிநடத்தினார். இந்த வெற்றியானது, ஒலிம்பிக் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் ஒரு ஆப்பிரிக்க தேசத்தின் முதல் வெற்றியாகும்.

மேற்கோள்கள்

தொகு