ஜேம்ஸ் தொம்பர்
ஜேம்ஸ் தொம்பர் (Fr. James Tombeur, 1924-2002) கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஒரு துறவி. பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்தவர். குமரி மாவட்டத்தில் பொதுச்சேவை செய்தவர்.
வாழ்க்கை
தொகுதொம்பர் 29-108-1924ல் பெல்ஜியத்தில் பிறந்தார். 1952ல் இந்தியாவுக்கு கத்தோலிக்கத் துறவியாக வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல சிற்றூர்களில் சேவைசெய்தார். தான் சேவைசெய்யும் ஊர்களில் கைத்தொழில்களை சிறிய தொழிற்சாலைகளாக ஆக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். இவர் நிறுவிய பல தொழிற்சாலைகள் மிகவெற்றிகரமாக இன்றும் பலநூறுபேருக்கு வேலைவாய்ப்பளித்து வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன.
குமரிமாவட்டத்தில் நாகர்கோயிலை அடுத்துள்ள சுங்கான்கடையில் இவர் அமைத்து வளர்த்த திருமலா மண்பாண்டத்தொழ்ற்சாலை இன்றும் சிறப்பாக நடந்துவருகிறது. இப்போது அது தமிழ்நாடு காதி போர்டின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. முட்டம் கடற்கரையில் பெல்ஜிய அரசின் உதவியுடன் மரத்தால் படகுகட்டும் தொழிற்சாலை ஒன்றை அமைத்தார். அது காலபோக்கில் நசிவுகண்டு இன்று அழிந்துவிட்டது. தன்னுடைய தொழிற்சாலைகளில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை இருக்கும்படி பார்த்துக்கொண்டார்
ஆன்மீகப் பங்களிப்பு
தொகுஜேம்ஸ் தொம்பர் இந்தியப்பண்பாடு மீது, குறிப்பாக இந்தியக் கட்டிடக்கலைமீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய கோயில் கலைவடிவங்களை அடியொற்றி தேவாலயங்களை உருவாக்க முயன்றார். குமரிமாவட்டம் களியிக்காவிளை அருகே பரைக்குன்று ஊரில் இவர் கட்டிய தேவாலயத்தில் சிற்பக் கல்தூண்கள் அழகிய வடிவில் அமைந்திருந்தன. நல்லாயன்புரம் என்ற ஊரில் இந்துகோபுரவடிவங்களையும் தேவாலயக் கூம்புக்கோபுர வடிவையும் கலந்து சோதனை முயற்சியாக ஒரு தேவாலயம் கட்டினார்
இந்திய ஓவியக்கலையின் அழகியலை ஒட்டி கிறித்தவ ஓவியங்கள் வரையப்படவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார் தொம்பர். தேவலாயக் கண்ணாடி ஓவியங்களில் முகலாய சிற்றோவிய அழகியலை உருவாக்க முயன்றார். இந்தியாவுக்குரிய கிறித்தவம் ஒன்று இந்தியப் பண்பாட்டுத் தனித்தன்மையுடன் உருவாகவேண்டுமென்று விரும்பினார்.
கடைசிக்காலத்தில் அவர் சுங்கான்கடை திருமலா ஆசிரமத்தில் தியானத்தில் ஒதுங்கி வாழ்ந்தார். 10-10.-2002 அன்று ஜேம்ஸ் தொம்பர் மறைந்தார். அவரது சிலை பரைக்குன்று தேவாலயத்திலும் சுங்கான்கடை மண்பாண்ட தொழிற்சாலைக்கு முன்னாலும் அமைக்கப்பட்டுள்ளது.