ஜேம்ஸ் பாண்ட் தீவு
ப்பாங் ங்கா வளைகுடாவில் உள்ள ஒரு குட்டித் தீவு ஆகும்
ஜேம்ஸ் பாண்ட் தீவு அல்லது (Khao Phing Kan) என்பது தாய்லாந்து நாட்டில் ப்பாங் ங்கா வளைகுடாவில் உள்ள ஒரு குட்டித் தீவு ஆகும். 1974 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனை உளவாளி கதாபாத்திரம் நடித்த தி மேன் வித் கோல்டன் கன் என்ற ஹாலிவுட் படத்தின் சில பகுதிகள இந்த தீவில் படமாக்கப்பட்டன. அதை தொடர்ந்து இந்த தீவு தாய்லாந்து மக்களால் ஜேம்ஸ் பாண்ட் தீவு என அறியப்படுகிறது. இந்த தீவு ப்பாங் ங்கா மாகாணத்தில் உள்ள ஆவ ப்பாங் ங்கா தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும்.