ஜொகூர் லாமா

ஜொகூர் லாமா (Johor Lama) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் முந்திய தலைநகரம் ஆகும். இது வரலாற்றுப் புகழ் பெற்ற நகரம். இந்த நகரம் ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில், அதே பெயர் கொண்ட கோத்தா திங்கி நகரத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஜொகூர் ஆற்றின் மருங்கில் அமைந்துள்ள ஓர் அமைதியான நகரம்.

ஜொகூர் லாமா

இங்கு 1587ஆம் ஆண்டு வரையில் ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சி நகரமாக விளங்கியது. 1540-இல் அங்கு ஒரு கோட்டையும் கட்டப்பட்டது. 1587-இல் போர்த்துகீசியர்கள் இந்த நகரின் மீது படையெடுத்தனர். 8000 உள்நாட்டு மலாய்க்கார வீரர்கள் அந்தக் கோட்டையைத் தற்காத்தனர். இருப்பினும் 500 போர்த்துகீசியர்கள் கொண்ட படையினரை அவர்களால் எதிர்க்க முடியவில்லை.[1]

பின்னர், அந்தக் கோட்டை போர்த்துகீசியர்களால் இடிக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டது. அந்தக் கோட்டையின் சிதறிய பாகங்கள் மட்டுமே வரலாற்றுச் சுவடுகளாக எஞ்சியுள்ளன. கோட்டை இருந்த இடத்தில் இப்போது ஒரு நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_லாமா&oldid=2024851" இருந்து மீள்விக்கப்பட்டது