ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட்
ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட் (Johannes (van Waveren) Hudde ஏப்ரல் 23, 1628 – ஏப்ரல் 1704) டச்சு நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரின் மேயர். அவர் ஒரு கணிதமேதையும் கூட. அவரே, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராகவும் இருந்திருக்கிறார்.
ஜொஹான்ஸ் ஹூட் Johannes Hudde | |
---|---|
ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட் | |
பிறப்பு | ஏப்ரல் 23, 1628 ஆம்ஸ்டர்டாம் |
இறப்பு | ஏப்ரல் 15, 1704 ஆம்ஸ்டர்டாம் |
துறை | கணிதம் |
ஜொஹான்ஸின் தந்தை செல்வம் வளம் மிக்க ஒரு வியாபாரி. முதலில் ஜொஹான்ஸ் சட்டம் படித்தார். பின்னர் பிரான்ஸ் வான் ஸ்கூடன் என்ற ஆசிரியரின் தூண்டுதல் மூலம் கணிதத்தில் ஈர்ப்பு ஏற்பட்டதனால் கணிதம் படித்தார். கணிதத்தில் பெருமம் மற்றும் சிறுமம், சமன்பாடுகளின் கோட்பாடு போன்ற தலைப்புகளில் அவரது பங்களிப்புகள் அமைந்தது.
அவர் மேயராக இருக்கும்போது, ஆம்ஸ்டர்டாம் நகர கால்வாய்களை உயரமான நீரலைகளைக் கொண்டு அடித்து கழிவு நீரை அகற்ற உத்தரவிட்டிருந்தார். நகரின் தூய்மையை மேன்மையாகக் கருதினார். ஆம்ஸ்டர்டாம் நகரில் ஹூட்ஸ் கற்கள் என்ற பெயரில் நீர்மட்டத்தை அளவிடும் கற்கள் வைத்திருந்தனர். அவை நகரில் கோடையில் உயர் நீர் மட்டம் காட்ட பயன்பட்டது. பின்னர் ஐரோப்பாவில் பரவலாக உபயோகிக்கப்பட்ட நீர்மட்டத்தை அளவிடும் முறைக்கு இது அடிப்படையாக அமைந்தது.