ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம் (Jogja National Museum) இந்தோனேஷியாவில் யோகியாகர்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு சமகால கலை அருங்காட்சியகம் ஆகும்.[1] ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யயாசன் யோகியாகர்த்தா செனி நுசாந்தாரா (ஒய்.எஸ்.எஸ்.என்) என்ற நிர்வாகத்தின் கீழ் நிறுவப்பட்ட அருங்காட்சியகம் ஆகும். ஜே.என்.எம் கட்டிட வளாகம் முதலில் ஒரு முன்னாள் முதல் இந்தோனேசியா காட்சிக் கலைபபள்ளி (ஏ.எஸ்.ஆர்.ஐ. 1950) மற்றும் காட்சி, கலை மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (எஃப்.எஸ்.ஆர்.டி 1984) என்ற நிலைகளில் செயல்பட்டது. பின்னர் யோககர்த்தா இந்தோனேசிய கலை நிறுவனம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
குறிக்கோள்
தொகுஉள்ளூர் அல்லது தேசிய அளவில் கலாச்சார கலைகளைப் பாதுகாகும் நிலையிலும், வளர்க்கும் நிலையிலும் அதிக கவனம் செலுத்துவதை ஜோக்ஜா தேசிய அருங்காட்சியக நிர்வாகம் தன்னுடைய உறுதிப்பாடாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உண்மையில், அதன் நோக்குநிலைகளைப் பற்றிய சுயவிவரக்குறிப்பில், இந்தோனேசியாவின் சமகால காட்சி கலையின் ஒவ்வொரு அழகியல் சாதனைகளுக்கும் விளக்கக்காட்சி இடத்திற்கான மாற்றுகளை முன்வைத்து இந்த அருங்காட்சியகம் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. அதன் காரணமாக இந்தோனேசியாவில் காட்சி கலையின் பல்வேறு பரிமாணங்களை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை இந்த அருங்காட்சியகம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அதனைப் பற்றி மிகவும் விரிவாக விவாதிக்கிறது.
நிர்வாகம்
தொகுஜோக்ஜா தேசிய அருங்காட்சியக நிர்வாகத்தின் கீழ் ஒரு மேற்பார்வை வாரியம் உள்ளது. அந்த மேற்பார்வை வாரியத்தில் நிர்வாக இயக்குநர், கே.பி.எச் “நீக்கோ” விரோனெகோரோ, எம்.எஸ்சி., வணிக மற்றும் மேம்பாட்டு இயக்குநர் ரிஸ்கி அர்பாலி, செயல்பாட்டு இயக்குநர் ஹெர்தர் அரி ஆண்டி, செயலாளர் ஆக்னஸ் இர்மா, தொழில்நுட்ப மேலாளர் நுக்ரோஹோ ஆரி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பெஜோ ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த அருங்காட்சியகம் பல மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. அதன் மேம்பாட்டு கடமைகளில் ஒன்று சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தம் பணியை உருவாக்குவது ஆகும். அதனுடன், காட்சிக்கூடங்களைப் பயன்படுத்துவதற்கான நன்கொடை, அவ்வப்போது பல நிகழ்ச்சிகளை நடத்தி நன்கொடையாளர் மூலம் வருமானம் பெறுதல், காட்சிக்கூடங்களுக்கு நன்கொடையாளர்களைத் தேடிப் பெறல், ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள கடையின் மூலம் வருமானம், விடப்படுகின்ற ஏலத்தின் மூலமாக வரும் தொகையில் பங்கு, அருங்காட்சியகத்தில் பணியாற்றுகின்ற உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை, அதனைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுப்போரை பிற விதங்களில் அணுகி நன்கொடை பெறுதல் என்ற வகைகளின் மூலமாகப் பெறப்படுகின்ற செயல்பாட்டு நிதி வசதியைக் கொண்டு இயங்குகிறது.[2]
திட்டங்கள்
தொகுஜோக்ஜா தேசிய அருங்காட்சியக நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் பல்வேறு வகையான நடவடிக்கைகளைக் கொண்டு அமைந்துள்ளது.[2]
கலை கண்காட்சி
தொகுகாட்சி நிலையில் அமைந்த கலை கண்காட்சி இந்த அருங்காட்சியகத்தின் வழக்கமான செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வகையான கண்காட்சியினை அமைப்பதற்கான யோசனையை ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகமோ அந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலைஞர்களோ (தனித்தனியாக அல்லது குழுவாக இணைந்து) அல்லது அந்த அருங்காட்சியகக் கட்டமைப்பின் மூலமாகவோ இவ்வகையான திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன.
கலைஞர்களை ஊக்குவித்தல்
தொகுவளர்ந்து வரும் இளம் கலைஞர்களை ஊக்குவித்தல் இந்த அருங்காட்சியகத்தின் மற்றொரு திட்டம் ஆகும். இந்தோனேசியாவின் கலை காட்சி மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு நல்ல பெயரைக் கொண்டுவரும் வகையில் சிறந்த கலைப்படைப்புகளை உலகுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஒரு கூறாக ஆரம்ப நிலைக் கலைஞர்கள் அவர்களை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வகையில் இந்த நோக்கம் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. குடிமக்களுக்கான காட்சிக்கூடம் என்ற காட்சிக்கூடத்தின் மூலமாக வளர்ந்து வரும் கலைஞர்களின் படைப்புகளை அங்கு காட்சிப்படுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வசதியான இலவசமாக வழங்கப்படுகிறது.
பல்வகை காட்சிக்கூடங்கள்
தொகுமேலும், அங்கு உள்ள காட்சிக்கூடங்கள் ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகத்தின் கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவ்வகையான காட்சிக்கூடங்கள் முதன்மைக் காட்சிக்கூடம் மற்றும் எதிர்காலத்திற்கான காட்சிக்கூடம் என்ற வகையில் அமைந்துள்ளன. மேலும் நுண்கலை அருங்காட்சியக்கூடம், பெண்டோபோ அஜியாசா, முன்னாள் சிற்பக் கட்டிடம் மற்றும் சிட்டஸ் கிரியா கட்டிடம் ஆகியவையும் இவற்றுள் அடங்கும்.
கருத்தரங்குகள்
தொகுஅருங்காட்சியக செயல்பாடுகளில் ஒதுக்கி வைக்க முடியாத மற்றொரு முக்கியமான கூறாக உள்ளது காட்சிக் கலையை மேம்படுத்துவதற்கான கூறுகளாகும். அவற்றில் விவாதங்கள், கருத்தரங்குகள், பணிப்பட்டறைகள் போன்றவை அடங்கும். இவை உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிலை என்ற நிலைகளில் இக்கலை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது. அத்துடன் இந்த அருங்காட்சியகம் பிற உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ "History". Jogja National Museum. பார்க்கப்பட்ட நாள் 6 May 2014.
- ↑ 2.0 2.1 Jogja National Museum, Yogyakarta, Indonesia