ஜோசப் மர்பி

ஜோசப் மர்பி (Joseph Murphy) (மே 20, 1898 - டிசம்பர் 16, 1981) அயர்லாந்தில் பிறந்தார், இவர் இயற்கை சார்ந்த அமெரிக்க எழுத்தாளர் மற்றும் புதிய சிந்தனை திருப்பணியாளர், இறை அறிவியல் மற்றும் சமய அறிவியலில் போதகராகவும் திகழ்ந்தார்.

ஆரம்ப வாழ்க்கை தொகு

மர்பி, ஒரு தனியார் சிறுவர்களின் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரின் மகனாக அயர்லாந்தில் பிறந்தார். இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்தார். அவர் போதகர் ஆவதற்கு முன்பே தன் இருபதாம் வயதில் இயேசு சபையில் உறுப்பினராக சேர்ந்தார். குணமாக்கும் பிரார்த்தனையுடன் ஒரு அனுபவம் அவருக்கு கிடைத்தது, அதன் பின்பு அவர் இயேசு சபையை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் சென்றார். அங்கு அவர் நியூயார்க் நகரத்தில் ஒரு மருந்து தயாரிப்பாளராக ஆனார் (அந்த சமயத்தில் வேதியியல் பட்டம் பெற்றார்). 1931 ஆம் ஆண்டில் எம்மெட் பாக்ஸ் (Emmet Fox) திருப்பணியாளராகப் பொறுப்பேற்ற குணமாக்கும் தேவாலயத்திற்கு செல்லத் தொடங்கினார்[1]

தொழில் வாழ்க்கை தொகு

மர்பி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். அங்கு இந்திய முனிவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டார். அத்தோடு இந்து சமயத் தத்துவத்தை கற்றுக் கொண்டார். அவர் பின்னர் அமெரிக்காவில் இந்து சிந்தனைகள் கொண்ட ஒரு புதிய தேவாலயத்தை உருவாக்கினார். 1940 களின் மத்தியில், அவர் லாஸ் ஏஞ்சல்சுக்குச் சென்றார். அங்கு அவர் சமய அறிவியல் நிறுவனர் ஏர்னஸ்ட் ஹோல்ம்சை சந்தித்தார். 1946 இல் ஹோல்ம்சால் சமய அறிவியலுக்குப் போதகராக நியமிக்கப்பட்டார், அதன் பிறகு நியூயார்க்கில் உள்ள ரோச்செஸ்டரில் போதனை செய்தார். பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சமய அறிவியல் நிறுவனத்திற்கு போதகரானார். இறை அறிவியல் சங்கத்தின் தலைவர் எர்வின் கிரெக்குடன் ஏற்பட்ட தொடர்பால் இறை அறிவியலில் இணைந்தார். 1949 இல் அவர் லாஸ் ஏஞ்சலஸ் இறை அறிவியல் தேவாலயத்தின் திருப்பணியாளராகி அத்தேவாலயத்தினை நாட்டின் மிகப்பெரிய புதிய சிந்தனை சபைகளில் ஒன்றாக உருவாக்கினார்

சொந்த வாழ்க்கை மற்றும் இறப்பு தொகு

அடுத்த தசாப்தத்தில், மர்பி திருமணம் செய்து கொண்டார். பின்னர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் எழுதத் தொடங்கினார். அவரது முதல் மனைவி 1976 ல் இறந்த பிறகு, அவர் தனது நீண்டகால செயலாளராக இருந்த, இறை அறிவியல் திருப்பணி செய்பவரை மறுமணம் செய்தார். அவர் தனது திருச்சபையை கலிபோர்னியாவிலுள்ள லுகுனா ஹில்ஸ் நகரத்திற்கு மாற்றினார். அங்கு அவர் 1981 ல் இறந்தார். அவருடைய மனைவியான டாக்டர் ஜீன் மர்பி சில ஆண்டுகள் இந்த சபையைத் தொடர்ந்தார்.

ஆதார நூற்பட்டியல் தொகு

  • This Is It or The Art Of Metaphysical Demonstration (1945)
  • Wheels of Truth (1946)
  • The Perfect Answer (1946)
  • Supreme Mastery of Fear (1946)
  • St. John Speaks (1948)
  • Love is Freedom (1948)
  • The Twelve Powers Mystically Explained (1948)
  • Riches are Your Right (aka Special Meditations for Health, Wealth, Love, and Expression) (1952)
  • The Miracles of Your Mind (1953)
  • The Fragrance of God (1953)
  • Magic of Faith (1954)
  • The Meaning of Reincarnation (1954)
  • Believe in Yourself (1955)
  • How to Attract Money (1955)
  • Traveling With God (1956)
  • Peace Within Yourself (St. John Speaks revised) (1956)
  • Prayer Is the Answer (1956)
  • How to Use Your Healing Power (1957)
  • Quiet Moments with God (1958)
  • Pray Your Way Through It (1958)
  • The Healing Power of Love (1958)
  • Stay Young Forever (1958)
  • Mental Poisons and Their Antidotes (1958)
  • How to Pray With a Deck of Cards (1958)
  • Living without Strain (1959)
  • Techniques in Prayer Therapy (1960)
  • Nuclear Religion (1961)
  • Lord Teach Us to Pray (is the 2nd chapter of Traveling With God) (1962)
  • Why Did This Happen to Me? (1962)
  • The Power Of Your Subconscious Mind (1963)
  • The Miracle of Mind Dynamics (1964)
  • The Amazing Laws of Cosmic Mind Power (1965)
  • Your Infinite Power to Be Rich (1966)
  • The Cosmic Power Within You (1968)
  • Infinite Power for Richer Living (1969)
  • Secrets of the I Ching (1970)
  • Psychic Perception: The Magic of Extrasensory Perception (1971)
  • Miracle Power for Infinite Riches (1972)
  • Telepsychics: The Magic Power of Perfect Living (1973)
  • The Cosmic Energizer: Miracle Power of the Universe (1974)
  • Great Bible Truths for Human Problems (1976)
  • Within You Is the Power (1977)
  • Songs of God (1979)
  • How to Use the Laws of Mind (1980)
  • These Truths Can Change Your Life (1982)
  • Collected Essays of Joseph Murphy (1987)

மேற்கோள்கள் தொகு

  1. Gale Group "Joseph Murphy" Religious Leaders of America, 2nd ed. Gale Group, 1999. Reproduced in Biography Resource Center. Farmington Hills, Mich.: Gale, 2009. http://galenet.galegroup.com/servlet/BioRC

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_மர்பி&oldid=3477643" இலிருந்து மீள்விக்கப்பட்டது