ஜோசப் வில்சன் ஸ்வான்
ஜோசப் வில்சன் ஸ்வான் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர். மின்சார விளக்குக்கான வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவர். மின் ஒளி விளக்கைப் பற்றிய தனது கண்டுபிடிப்புகள் பற்றி ஸ்வான் 18 டிசம்பர் 1878 அன்று டைனேயில் உள்ள நியூகேஸில் என்ற இடத்தில் விரிவுரை ஆற்றினார். ஆனால் 1880 வரை தான் கண்டறிந்த மின் விளக்கிற்காக காப்புரிமை பெறவில்லை. அதன் பின்னரே 1880 அன்று தாமசு ஆல்வா எடிசனால் காப்புரிமை பெறப்பட்டது.[1] 1881 ல், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் சேவாய் திரையரங்கில், ஸ்வான் மின்சாரம் மூலம் தனது மின்விளக்கை எரியவிட்டார். உலகில் நாடகம் மற்றும் பொது அரங்குகளில் மின் விளக்கு எரிந்தது இதுவே முதல் முறையாகும் [2]
ஜோசப் ஸ்வான் | |
---|---|
ஜோசப் ஸ்வான்-1900-ல் | |
பிறப்பு | ஜோசப் வில்சன் ஸ்வான் 31 அக்டோபர் 1828 Bishopwearmouth, Sunderland, England |
இறப்பு | 27 மே 1914 வார்லிங்காம், சர்ரே, இங்கிலாந்து | (அகவை 85)
தேசியம் | பிரித்தானியா |
துறை | இயற்பியலாளர் வேதியலாளர் |
அறியப்படுவது | மின்விளக்கு |
1904 ஆம் ஆண்டில், இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் என்பவரால் ஜோசப் ஸ்வானுக்கு 'சர்' என்னும் வீரப்பட்டம் வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி 'ஹுக்த்ஸ் பதக்கம்' வழங்கியது. மற்றும் பாராசெயூட்டிகல் சொசைட்டி ஜோசப் ஸ்வானை கெளரவ உறுப்பினராக ஏற்றுக் கொண்டது. பிரான்சு அரசாங்கம் லீஜன் டி ஹானர் (Légion d'honneur) எனப்படும் சிறப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 1881 ல் பாரிஸ் ஒரு சர்வதேசக் கண்காட்சியில் ஜோசப் ஸ்வானின் கண்டுபிடிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன. மேலும் ஸ்வான் இந்த கண்டுபிடிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரீஸ் நகரம் முழுதும் மின்சார விளக்குகளால் ஒளிர்ந்தது.[3]
இளமை
தொகுஜோசப் ஸ்வான் 1828 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பிசப்வேர்மௌத் எனுமிடத்தில் உள்ள பாலியன் ஹாலில் (தற்போது இது சுந்தர்லேண்ட் எனுமிடத்தில் ஒரு பகுதி) ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஜான் ஸ்வான், தாயார் இசெபெல்லா கேமரூன் ஆவர்.[4] ஜோசப் ஸ்வான் தனது குடும்ப வறுமை நிலையிலும் இயற்பியல், வேதியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மிகச்சிறந்த புலமை பெற்றார். டைனேவில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பின்னர் மாவ்சன் என்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக உயர்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Thomas Alva Edison: The Improvement of the Electric Light Bulb
- ↑ "The Savoy Theatre", The Times, 3 October 1881>
- ↑ "Sir Joseph Swan (1828-1914)". Royal Pharmaceutical Society of Great Britain. Retrieved 2010-01-11. "Swan made groundbreaking discoveries in the fields of electric lighting and photography. He had already received the Legion of Honour when he visited an international exhibition in Paris in 1881. The exhibition included exhibits of his inventions, and the city was lit with electric light, thanks to Swan's invention"
- ↑ Davidson, Michael W. and The Florida State University. "Molecular expressionsTM. Science, optics and you. Pioneers in optics. Joseph Swan (1828-1914)." Last modification February 26, 2004. Retrieved November 16, 2009.