ஜோனதன் ஸ்விப்ட்
ஜோனத்தன் ஸ்விப்ட் (Jonathan Swift, 30 நவம்பர், 1667 – 19 அக்டோபர், 1745) ஓர் ஆங்கில அயர்லாந்து எழுத்தாளரும், கவிஞரும், விகடகவியும், கட்டுரையாளரும், அரசியல்வாதியுமாவார்.[1] சிறிது காலம் டப்லினில் செயிண்ட் பாட்ரிக் தேவாலயத்தின் பாதிரியாராகப் பணியாற்றி பின் அதன் அதிகாரியுமானார்.[2] இவர் "கலிவரின் பயணங்கள்" என்ற உலகப் புகழ்பெற்ற புனைகதை மூலம் அறியப்படுகிறவர் ஆவார். புத்தகங்களின் யுத்தம், டிராப்பியரின் கடிதங்கள் போன்றவை இவரது புகழ்பெற்ற பிற படைப்புகள் ஆகும்.
ஜோனதன் ஸ்விப்ட் Jonathan Swift | |
---|---|
சார்லசு ஜெர்வாசு வரைந்த ஓவியம் | |
பிறப்பு | டப்லின், அயர்லாந்து | 30 நவம்பர் 1667
இறப்பு | 19 அக்டோபர் 1745 டப்ளின் | (அகவை 77)
புனைபெயர் |
|
தொழில் |
|
மொழி | ஆங்கிலம் |
தேசியம் | ஐரியர் |
கல்வி நிலையம் | டிரினிட்டி கல்லூரி, டப்ளின் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | |
கையொப்பம் | |
இளமை
தொகுஜோனதன் ஸ்விப்ட் அயர்லாந்தில் உள்ள டப்லின் நகரத்தில் 1667- ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை பெயரும் ஜோனதன் ஸ்விப்ட் ஆகும். இரண்டாவது குழந்தையாக இவர் பிறந்த ஏழு மாதங்களில் அதே வருடத்தில் தந்தை இறந்தார்.[3][4][5] இவரது தாய் ஹெரிக் ஆவார்.[6] 1688 ஆம் ஆண்டில் இரண்டாம் ஜேம்ஸ் பதவி துறந்ததைத் தொடர்ந்து கத்தோலிக்கக் கலகம் ஆங்கிலக் குடியுரிமைப் போர் வெடித்தது. நிலச்சுவான்தாரராக இருந்த தந்தையின் சொத்துகளை அரசு பறித்துக் கொண்டது. எனவே ஸ்விப்ட் அவரது தாயாருடன் அகதியாக இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு சர் வில்லியம் டெம்பிள் பிரபுவின் நம்பிக்கைக்குரியவரும் தனது உறவினருமான குட்வின் என்பவரது பாதுகாப்பில் வளர்ந்து பின்னர் வில்லியம் டெம்பிள் பிரபுவின் செயலாளராகவும் ஆனார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Encyclopaedia Britannica,
Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language
. - ↑ "Swift", Online literature.
- ↑ [1]
- ↑ Jonathan Swift.
- ↑ "Jonathan Swift: His Life and His World". The Barnes & Noble Review.
- ↑ Stephen, Leslie (1898). "Swift, Jonathan". Dictionary of National Biography 55. London: Smith, Elder & Co.
- ↑ Stephen DNB p. 205
வெளி இணைப்புகள்
தொகு- "Swift, Jonathan". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- BBC audio file "Swift's A modest Proposal". BBC discussion. In our time.
- ஜோனதன் ஸ்விப்ட் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Jonathan Swift at the National Portrait Gallery, London
- Swift, Jonathan (1667–1745) Dean of St Patrick's Dublin Satirist at the National Register of Archives