ஞானமுத்து சிறிநேசன்

ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuttu Sirinesan, பிறப்பு: 01 சூலை 1960) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஞானமுத்து சிறிநேசன்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 1, 1960 (1960-07-01) (அகவை 64)
மகிழவெட்டுவான், மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

ஞானமுத்து சிறிநேசன் மட்டக்களப்பு, படுவான்கரை, மகிழவெட்டுவான் என்ற ஊரில் ஞானமுத்து, பூரணம்மா ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தந்தையார் ஒரு கிராம சேவை அலுவலர். ஆரம்பக் கல்வியை மகிழவெட்டுவான் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.[1] 18 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.[1] அதே வேளையில் இவர் இளங்கலை, முதுகலை (அரசறிவியல்), பட்டப்பின் (கல்வி வித்தாண்மை) பட்டங்களையும் பெற்றுள்ளார். இலங்கை கல்வி நிருவாக சேவைத் தேர்வில் சித்தியடைந்து மட்டக்களப்பு மேற்கு உதவிக் கல்விப் பணிப்பாளராக நான்கு ஆண்டுகளும்,[1] பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]

அரசியலில்

தொகு

சிறிநேசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் (48,821) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[3][4][5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "ஞா. சிறீநேசனுடன் நேர்காணல்". வீரகேசரி. 2 ஆகத்து 2015. 
  2. "TNA hands over nominations for all five districts of north and east". Tamil Diplomat. 10 சூலை 2015. http://tamildiplomat.com/tna-hands-over-nominations-for-all-five-districts-of-north-and-east/. 
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  4. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  5. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  6. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  7. "TNA MPs grandly welcomed in Batticaloa". Lankasri News. 19 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானமுத்து_சிறிநேசன்&oldid=3214352" இலிருந்து மீள்விக்கப்பட்டது