ஞானமுத்து சிறிநேசன்
ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuttu Sirinesan, பிறப்பு: 01 சூலை 1960) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஞானமுத்து சிறிநேசன் | |
---|---|
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 1, 1960 மகிழவெட்டுவான், மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஞானமுத்து சிறிநேசன் மட்டக்களப்பு, படுவான்கரை, மகிழவெட்டுவான் என்ற ஊரில் ஞானமுத்து, பூரணம்மா ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தந்தையார் ஒரு கிராம சேவை அலுவலர். ஆரம்பக் கல்வியை மகிழவெட்டுவான் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.[1] 18 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.[1] அதே வேளையில் இவர் இளங்கலை, முதுகலை (அரசறிவியல்), பட்டப்பின் (கல்வி வித்தாண்மை) பட்டங்களையும் பெற்றுள்ளார். இலங்கை கல்வி நிருவாக சேவைத் தேர்வில் சித்தியடைந்து மட்டக்களப்பு மேற்கு உதவிக் கல்விப் பணிப்பாளராக நான்கு ஆண்டுகளும்,[1] பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]
அரசியலில்
தொகுசிறிநேசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் (48,821) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[3][4][5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "ஞா. சிறீநேசனுடன் நேர்காணல்". வீரகேசரி. 2 ஆகத்து 2015.
- ↑ "TNA hands over nominations for all five districts of north and east". Tamil Diplomat. 10 சூலை 2015. http://tamildiplomat.com/tna-hands-over-nominations-for-all-five-districts-of-north-and-east/.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "TNA MPs grandly welcomed in Batticaloa". Lankasri News. 19 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.