ஞானவாணி வானொலி

[[|frameless|மையம்]] ஞானவாணி என்பது இந்தியாவில் பல நகரங்களிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரு கல்வி பண்பலை வானொலி ஒலிபரப்பு ஆகும்.

வரலாறு

தொகு

2001 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தில் 2013 நிலவரப்படி சுமார் 40 வானொலி நிலையங்கள் இயங்குகின்றன.[1] முதலில் அலகாபாத், பெங்களூர், போபால், விசாகப்பட்டிணம், லக்னோ மற்றும் கோவையில் தனது ஒலிபரப்பினைத் தொடங்கியது ஞானவாணி. அதன் பின் படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முதலில் கோவை ஜி.ஆர்.டி. கலை அறிவியல் கல்லூரியில் ஒலிக்கத் துவங்கியது ஞானவாணி.

ஒவ்வொரு நிலையத்தினதும் ஒலிபரப்பு சுமார் 60 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கும் வகையில் செயற்படுகிறது. அதனால், நிலையம் அமைந்துள்ள நகரத்திலும் சுற்றியுள்ள ஊர்களிலும் வாழும் மக்கள் இந்த ஒலிபரப்பைக் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

ஞானவாணி சேவை

தொகு

ஞானவாணி ஒலிபரப்பு இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த பிராந்திய மொழிகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஒலிபரப்பாகிறது. இந்த வானொலி பண்பலை 105.6 மெகாஹேட்சில் ஸ்டீரியோ முறையில் ஒலிபரப்பாகிறது.

ஒவ்வொரு பிராந்திய நிலையத்திற்கும் அதற்கு வேண்டிய ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக் கழகத்தின் இலத்திரனியல் ஊடக தயாரிப்பு மையம் வழங்குகின்றது. கல்வி தொடர்பான தகவல்களை தயாரிப்பதிலும், அவற்றை பரப்புவதிலும் இந்த மையம் உதவுகிறது.

ஆரம்பக்கல்வி, இடைநிலை, மேல்நிலைக் கல்வி பாடங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுடன் வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, தொழில் முனைவோருக்கான தகவல்கள், சட்டம் தொடர்பான அறிவூட்டல், பெண்கள் முன்னேற்றம், அறிவியல் கல்வி என பலதிறப்பட்ட நிகழ்ச்சிகள் ஞானவாணி ஒலிபரப்புகளில் இடம்பெறுகின்றன. ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமன்றி நேயர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு உரையாடும் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின்றன. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் அந்த அந்தப் பகுதியின் தேவைகள் அறியப்பட்டு அதற்கேற்ப பயனுள்ள நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் படுகின்றன.

நேயர்களை நேரில் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடும் சந்திப்புகளும் ஞானவாணி ஒலிபரப்பு நிலையங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.[2]

திருநெல்வேலியிலிருந்து ஒலிபரப்பாகும் ஞானவாணி ஒலிபரப்பின் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம்.

ஞானவாணி சேவை நிறுத்தம்

தொகு

இந்தியா முழுவதும் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த ஞானவாணி வானொலியை நடுவண் அரசு 2014 இறுதியில் இந்தியா முழுவதிலும் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Making waves with an FM radio channel". Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
  2. நெல்லையில் ஞானவாணி நேயர்கள் சந்திப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானவாணி_வானொலி&oldid=3556393" இலிருந்து மீள்விக்கப்பட்டது