ஞானாமிர்த உரை

ஞானாமிர்த உரை 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஞானாமிர்தம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. இதனை எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. இவர் ஞானாமிர்தம் நூல் எழுதிய வாகீசர் பரம்பரையில் வந்து உபதேசம் பெற்ற ஒரு ‘பக்குவி’[1] எனலாம்.

கொடை நல்க வேண்டிய பொருள்களில் ஒன்று. வண் காலேகம் என்னும் பனைமட்டை விசிறி (இங்கு உள்ள படம் சீன நாட்டு விசிறி)

உரை பற்றிய சில குறிப்புகள் தொகு

இவரது உரை கடினமான இலக்கிய நூல்நடையை விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ளது. ஞானாமிர்த நூலை இந்த உரை ‘தமிழாகமம்’[2] என்று குறிப்பிடுகிறது. தானம் தரும் பொருள் என இந்த உரை குறிப்பிடுவன: சுவைநீர், குதிரை, ஒளிதரும் விளக்கு, ஆடை, அணிகலன், வட்டமான விசிறி, பொன், நெல், போர்வை முதலானவை.[3]

அடிக்குறிப்பு தொகு

  1. பக்குவம் பெற்றவர்
  2. தமிழ் வேதம்
  3. நல்லோர்க்கு உகந்த பல் சுவைப் போனகம்
    மா கதிர் அணி மணி வண்காலேகம்
    செம்பொன் நென்துகில்

கருவிநூல் தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானாமிர்த_உரை&oldid=1881297" இலிருந்து மீள்விக்கப்பட்டது