ஞான இலக்கியம்
பெருங்கனிவு இலக்கியம் (Wisdom literature) அல்லது ஞான இலக்கியம் அல்லது பெருமதி இலக்கியம் அல்லது சான்றோர் இலக்கியம் என்பது பொதுவாக பண்டைய கிழக்கத்திய நாடுகளின் அருகில் காணப்பட்ட இலக்கியக்கலையின் வகை ஆகும். இது அறிஞர்கள், சித்தர்கள், முனிவர்களின் போதனைகளான புனிதத்தன்மை, அறம், நல்லொழுக்கங்கள் பற்றிய கூற்றுக்களை உள்ளடக்கியது. இக்கலை மரபு வாய்வழி கதை கூறல் நுட்பத்தைத் தனிநடையாக பயன்படுத்தி இருந்தாலும், இது எழுத்து வடிவிலும் பரப்பப்பட்டது.
இவ்விலக்கிய வகை பிரபுக்களின் பிரதிபலிப்பாக இருந்தது. இது இஸ்லாமியம் மற்றும் மேற்கத்திய மறுமலர்ச்சி இலக்கியத்தில் நீண்ட வறலாற்றை கொண்டது. இது ஞான இலக்கியத்தில் மதச்சார்பற்ற அறிவாற்றலாக இருந்தது.ஹெஸியாட் அவர்களின் தரமான பண்டைய நீதிபோதனைகள் போதிக்கக்கூடிய செய்யுட்கள், அவரது 'பணிகள்' மற்றும் 'நாட்களில்' அறிவின் மூலமாக கருதப்பட்டது. இது எகிப்து, பபிலோனியா மற்றும் இஸ்ரேலின் ஞான இலக்கியத்தை ஒத்திருந்தது.
பண்டைய எகிப்து இலக்கியம் தொகு
பண்டைய எகிப்து இலக்கியத்தில் ஞான இலக்கியம் சேபெய்ட் (“கற்பித்தல்”) இலக்கிய வகையைச்சார்ந்தது. இது மத்திய எகிப்து ராஜ்யத்தின்போது மலர்ந்து, புதிய ராஜ்யத்தின்போது அதிகாரப்பூர்வமானது. இவ்விலக்கிய வகையின் குறிப்பிடத்தக்க படைப்புகளான ககேம்னியின் போதனைகள், ஃடஹோடெபின் நீதிமொழிகள், அமெனெம்ஹாட்டின் போதனைகள், மற்றும் விசுவாசமுள்ள போதனைகள் ஆகியவை ஆகும்.
வேதாகம ஞான இலக்கியம் மற்றும் யூத நூல்கள் தொகு
ஞான இலக்கியத்தின் அதிக புகழ்பெற்ற உதாரணங்கள் வேதாகமத்தில் காணப்படுகிறது.
ஞான (சேபியன்ஸியல்) நூல்கள் தொகு
போதனைகள் நிறைந்த (சேபியன்ஸியல்) நூல்கள் அல்லது “ஞானத்தின் நூல்கள்” என்ற சொல் வேதாகம ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டது. இது எபிரெய விவிலியத்தின், கிரேக்க பதிப்பிலுள்ள, எபிரெய வேதாகமத்தின் துணை நூல்களின் மேற்கோளாக உள்ளது. இதன் ஏழு நூல்களின் பெயர்களாவன யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, மற்றும் சீராக். பொதுவாக அனைத்து சங்கீதங்களும் ஞானப்பாரம்பரியத்தை சார்ந்ததில்லை.
யூதத்தில், ஞான நூல்கள் கெட்டுவிம் அல்லது "எழுத்துகளின்” பாகமாக கருதப்படுகிறது. கிறிஸ்தவத்தில் யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஆகியவை பழைய ஏற்பாட்டில் உள்ளது. ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, மற்றும் சீராக் ஆகியவை டியுட்டிரோகென்னானிகல் பணியாக சில பாரம்பரியத்தில் உள்ளது. இவைகள் கிரேக்க மறைபொருலிலுள்ள (அபோகிரிஃபா) ஆங்கிளிகன் மற்றும் புரெட்டெஸ்டன்ட் மொழிபெயர்பிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஞான நூல்கள் பரந்த பாரம்பரியமாகிய ஞான இலக்கியத்தில் உள்ளது. இது பண்டைய கிழக்கத்திய நாடுகளுக்கு அருகில் யூதம் தவிர்த்த பல மதங்களில் பரந்து காணப்படுகிறது.
எபிரெய விவிலியம் (செப்டுகின்ட்) தொகு
கிரேக்க சொல்லான சோபியா கிரேக்க வேதாகமத்தில் “ஞானம்” என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது மரபு வழி ஞான நூலில் மத்திய தலைப்பாக உள்ளது. ஞான நூல்களாவன யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, ஞான சீராக் மற்றும் பாருக் வரை (பழைய ஏற்பாட்டில் உள்ள கடைசி மூன்று அபோகிரிஃபல்/ டியுட்டிரோகென்னானிகல் நூல்கள் அகும்).
பீலோ மற்றும் லோகோஸ் தொகு
பீலோ என்பவர் அலெக்சாந்திரியாவிலுள்ள பண்டைய கிரேக்க கலாச்சார, மத எழுத்தாளராவார். இவர் யூத நூல்கள் மற்றும் பிளாட்டொவின் தத்துவத்தை ஒத்திட முயற்சித்தார். இவர் ஞானத்தின் பணி மற்றும் செயல்கள் என்பதை குறிக்க கிரேக்க சொல்லான லோகஸ், “வார்த்தை” என்று பயன்படுத்தினார். இக்கருத்து பின்பு யோவான் எழுதிய நற்செய்தியில், முதல் வசனத்தில், இயேசு கிறிஸ்து வானவரை தேவனின்(பிதா) நித்திய வார்த்தை (லோகஸ்) என்று குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண்க தொகு
குறிப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
நூல்தொகை தொகு
- Estes, Daniel J. (2010). Handbook on the Wisdom Books and Psalms. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0801038884.
- Crenshaw, James L. (2010). Old Testament Wisdom: An Introduction. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0664234591.
- Murphy, R. E. (2002). The Tree of Life: An Exploration of Biblical Wisdom Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0802839657. https://archive.org/details/treeoflifeexplor0000murp_p1r3.
- Toy, Crawford Howell (1911). "Wisdom Literature". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 28.
வெளி இணைப்புகள் தொகு
- பொதுவகத்தில் ஞான இலக்கியம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.