டகர் டுடூ
டகர் டுடூ என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சந்தாளி பழங்குடியின நடிகையும், பாடகியும், பாடலாசிரும், டிரைப் தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளரும் ஆவார்.[1][2][3] இவரது இயற்பெயர் டகர்மணி டுடூ. [4]
டகர் டுடூ | |
---|---|
பிறப்பு | டகர்மணி டுடூ 18 மே 1998 புருலியா, மேற்கு வங்காளம் |
பணி | சந்தாளி நடிகை மற்றும் பாடகி |
வாழ்க்கை
தொகுமே 18, 1998 அன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் பிறந்தார். ராணிபந்த் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் மேற்கத்திய இசை, இந்திய பாரம்பரிய இசை மற்றும் சந்தாளி பாரம்பரிய பாடல்களைப் பாடுவார்.
ஆசா என்ற சந்தாளி மொழி திரைப்படத்தில் நடித்தார். 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் ஆசா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.[5][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dagar Tudu को 'आशा' में बेहतरीन एक्टिंग के लिए मिला अवॉर्ड,दादा साहब फाल्के पुरस्कार से किया गया सम्मानित" (in இந்தி). பிரபாத் கபார்.
- ↑ "Pallavi Dey-Dagar Tudu: ডগররা যদি জিততে পারে, পল্লবীরা কেন হাল ছেড়ে দেয়?" (in வங்காளம்). ஜீ வங்காளம்.
- ↑ "Dagar Tudu Biography, Wiki, Age, Family, Height, Nationality & More". சம்பக் செய்திகள்.
- ↑ 4.0 4.1 "Dagar Tudu wins 'Best Actress' award at 12th Dada Saheb Phalke Film Festival". கவுகாத்தி டைம்சு.
- ↑ "Dada Saheb Phalke Film Festival 2022: Check out full list of winners". நியூசு 9 லிவ்.