டப்பி ஆலிம்
அகுமது நெய்னா ஆலிம் இலங்கையின் வெலிகம கல்பொக்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமய அறிஞர் மற்றும் பன்மொழிப் புலவர். டப்பி ஆலிம் என்று பரவலாக அறியப்பட்ட இப்புலவர் வாழ்வில் பெரும்பகுதியை மீஎல்லையில் கழித்தவர்.
இலங்கையில் “அறபுச் சிங்களத்தை“ அறிமுகப்படுத்தியவர் டப்பி ஆலிம் என்பதை ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இவர் எழுதிய தமிழ் சிங்களக் கவிதைகள் அறபு எழுத்திலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெலிகமையில் பிரசித்திபெற்றிருக்கின்ற மக்கா சென்றுவரும் ஹாஜிகளை வரவேற்கும் பாடலாசிரியரும் இவரே.
இவரது பாடல்களில் பல நாட்டார் இலக்கியமாகவே உள்ளன. பல கையெழுத்துப் பிரதிகளாகவே இன்னும் இருக்கின்றன.
அச்சேறிய நூல்கள்
தொகு- அறிவிற்பன விவேகசிந்து
- அப்துல்லா வொலிபேரில் சிந்து
உசாத்துணை
தொகு- மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு