டர்க்கின் திறப்பு


சதுரங்க விளையாட்டில் டர்க்கின் திறப்பு (Durkin Opening) என்பது டர்க்கின் தாக்குதல் அல்லது சோடியம் தாக்குதல் என்றும் அழைக்கப்படுகிறது. 1. Na3 என்ற நகர்வுடன் தொடங்கும் இத்திறப்பு சதுரங்க வீரர்களால் எப்போதாவது அரிதாக ஆடப்படுகிறது.

டர்க்கின் திறப்பு
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
a3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.Na3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் A00
மூலம் வழக்கமற்ற சதுரங்கத் திறப்பு
ஏனைய சொற்கள் டர்க்கின் தாக்குதல்
சோடியம் தாக்குதல்
Chessgames.com opening explorer

இத் திறப்புக்கு நியூ ஜெர்சியை சேர்ந்த ராபர்ட் ஜேம்சு டர்க்கின் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சோடியம் தாக்குதல் என்ற பெயர் இத்திறப்பின் முதல் நகர்வான 1. Na3 ஐ நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது வேதியியலில் சோடியத்தின் குறியீடு Na ஆகும்.

மதிப்பீடு

தொகு

வெள்ளை ஆட்டக்காரருக்கு முதல் நகர்வால் கிடைக்க வேண்டிய அனுகூலம், அரசியின் குதிரை தாறுமாறாக 1.Na3 என்று நகர்வதால் முழுமையாக கிடைப்பதில்லை. சதுரங்கப் பலகையின் ஓரத்திலுள்ள a3 சதுரத்தில் நின்று கொண்டு குதிரையால் அவ்வளவாக எதையும் சாதிக்க முடிவதில்லை. மையப்பகுதியில் நுழைந்து துடிப்புடன் ஆதிக்கம் செலுத்த முடியாமல் முடங்கிப் போய் நிற்கிறது. எனவே அங்கிருக்கும் குதிரையை விரைவில் நகர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒருவேளை வெள்ளை c4 என்று விளையாடினாலும் குதிரையை c4 சதுரத்திற்கு நகர்த்த வேண்டியதிருக்கும். (உதாரணமாக 1. ... d5 2.c4 dxc4 3.Nxc4) அல்லது Nc2 என்றாவது ஆடவேண்டும். வெள்ளையின் தொடக்கத் திட்டம் ஆங்கிலத் திறப்பில் ஆடுவதாக இருந்தால் குதிரையை c4 கட்டத்திற்கு நகர்த்தி கருப்பு ஆட்டக்காரரின் திறப்பு ஆட்டத் தயாரிப்புகளை அனுமதிக்காமல் காலம் தாழ்த்த முடியும். மறுபுறம், கருப்பு ஆட்டக்காரருக்கு காலவிரயம் ஏற்படுத்த இதைத் தவிர வேறு சிறந்த வழிகளும் காணப்படுகின்றன. உதாரணமாக b1-குதிரையை c3 கட்டத்திற்கு நகர்த்தலாம்.

பெயர் மாறுபாடுகள்

தொகு

டர்க்கின் திறப்பு பல்வேரு வகையான பெயர் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

  • 1...e5 2.Nc4 Nc6 3.e4 f5 (டர்க்கின் பலியாட்டம்)
  • 1...e5 2.d3 Bxa3 3.bxa3 d5 4.e3 c5 5.Rb1 (செலாடான் மாற்றாட்டம்)
  • 1...g6 2.g4 (செனோபோசுகியன் மாற்றாட்டம்)

மேற்கோள்கள்

தொகு
  • Hooper, David and Kenneth Whyld. "Durkin Opening." Oxford Companion to Chess. Oxford: Oxford University Press, 1992. 117.
  • Dunnington, Angus (2000). Winning Unorthodox Openings. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85744-285-4.
  • Eric Schiller (2002). Unorthodox Chess Openings (Second ed.). Cardoza. p. 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58042-072-9.
  • Benjamin, Joel; Schiller, Eric (1987). "Durkin Attack". Unorthodox Openings. Macmillan Publishing Company. pp. 103–04. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-016590-0.


இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டர்க்கின்_திறப்பு&oldid=3849636" இலிருந்து மீள்விக்கப்பட்டது