டாக்டர் என். ஜி. பி தொழில்நுட்ப நிறுவனம்

டாக்டர் என். ஜி. பி தொழில்நுட்ப நிறுவனம் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது[1]. இந்நிறுவனம் 2007 ஆம் ஆண்டு மருத்துவர் நல்ல ஜி. பழனிசுவாமி ஆவர்களால் தொடங்கப்பட்டு தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

அறிமுகம் தொகு

இந்நிறுவனம் மாணாக்கர்களை அதிகாரம் பெற்ற தொழில் முனைவோர், ஊழியர்கள், சமூக பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க தொடங்கப்பட்டது.

படிப்புகள் தொகு

இந்நிறுவனத்தில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[2]

இளங்கலை பட்டப்படிப்புகள்:

  1. கட்டுமானப் பொறியியல்
  2. இயந்திரப் பொறியியல்
  3. கணினி அறிவியல், பொறியியல்
  4. மின், மின்னணு பொறியியல்
  5. மின்னணு, தகவல் தொடர்பு பொறியியல்
  6. உயிர்மருத்துவப் பொறியியல்
  7. தகவல் தொழில்நுட்பவியல்

முதுகலை பட்டப்படிப்புகள்:

  1. பொதிக்கப்பட்ட அமைப்பு தொழினுட்பம்
  2. கணினி அறிவியல், பொறியியல்
  3. வடிவமைப்பு பொறியியல்
  4. சக்தி மின்னணுவியல், இயக்கிகள்
  5. முதுநிலை வணிக நிர்வாகம்

முனைவர் திட்டங்கள்:

  1. கணினி அறிவியல், பொறியியல்
  2. மின், மின்னணு பொறியியல்
  3. மின்னணு, தகவல் தொடர்பு பொறியியல்
  4. இயந்திரப் பொறியியல்

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.