டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு
டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு (Dr. M.G.R. Fisheries College and Research Institute, Thalainayeru) என்பது நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இணைவுபெற்ற மீன்வளக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 2017-18 கல்வி ஆண்டு முதல் செயல்படுகிறது. இக்கல்லூரியில் மீன்வளம் தொடர்பான இளநிலை அறிவியல் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இப்படிப்பிற்கு ஆண்டு தோறும் 60 மாணவர்கள் பொது கலந்தாய்வின் மூலம் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.[1]
குறிக்கோளுரை | "உணவு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கான மீன்வள அறிவியலைப் பயன்படுத்துதல்" |
---|---|
வகை | மீன்வளக் கல்லூரி |
உருவாக்கம் | 2017 |
துணை வேந்தர் | நாதன் பெலிக்சு |
துறைத்தலைவர் | எசு. பாலசுந்தரி |
அமைவிடம் | , , |
வளாகம் | ஊரகம் |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
துறைகள்
தொகு- மீன் வளர்ப்பு
- மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம்
- மீன் தொழில்நுட்பம் மற்றும் மீன் பொறியியல்
- மீன்வள உயிரியல் மற்றும் மீன்வள மேலாண்மை
- மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்
- நீர்வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை
- மீன் நோயியல் மற்றும் சுகாதார மேலாண்மை
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்
தொகு- இளநிலை அறிவியல்-மீன்வளம்